பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 1960ம் ஆண்டு, ஜப்பான் நாட்டுக் கல்வி அமைச்சகம், ஆசிரியர்களுக்குக் கையேடு ஒன்றினைத்தயாரித்து அச்சிட்டு அளித்தது, மாணவர்களின் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும்முக்கியத்துவம் அளித்ததுடன், அரசு பள்ளிகளாக இருந்தாலும், தனியார் பள்ளிகளாக இருந்தாலும், கட்டாயமாக இந்தப் பாட முறைகளைக் கடைப் பிடித்துக் கற்றுத் தந்தாக வேண்டும் என்று ஆணையிட்டு வெற்றி கண்டது. அத்துடன் உடற்கல்வியில் ஆய்வு நிகழ்த்தவும் அரசு ஊக்கமளித்தது. ஆரம்பப் பள்ளியிலிருந்தே மாணவர்களை உடல் நலத்திலும் பலத்திலும் தயார் செய்து வந்ததால், அகில உலகப் போட்டிகளில் முதன்மையான இடங்களை அடைய முயற்சித்தது. பலமுறை தொடர்ந்து வெற்றி கண்டாலும். ஆசியப் போட்டிகளிலே தலையாய இடத்தைப் பிடித்துக் கொண்டு, தக்க வைத்து சிறப்புப் பெற்ற பெருமையை ஜப்பான் அடைந்தது. தனித்திறன் போட்டிகளிலும், நீச்சல் போட்டிகளிலும் சீருடற் போட்டிகளிலும் ஜப்பானிய வீரர்களும் வீராங்கனை களும் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற்று பெருமை சேர்த்துக் கொண்டுள்ளனர். 18வது ஒலிம்பிக் பந்தயங்களை டோக்கியோவில் (1964) நடத்தவும் உரிமை பெற்று, சிறப்பாக நடத்தி பெருமை பெற்றது ஜப்பான். gG moytög"Go ao/að (Budo & Judo) பூடோ என்பது இராணுவப் போர்க்கலையாகும். ஜப்பானியர் போரிடும் இனத்திலிருந்து வந்தவர்களாதலால், அவர்கள் தெய்வ வழிபாட்டின்போது செய்கிற போர் முறையே பிறகு (Budo) என்று அழைக்கப்பட்டது. = இந்தப் போர்க் கலையை பயில்பவர்களை மிகவும் ஒழுக்கம் உள்ளவர்களாக்கும் என்பதால், உடற்கல்வியின் ஒரு