பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி f 215 பிரிவாக இதனை பள்ளிகளில் கற்பித்து வந்தனர், ஆரம்பப் பள்ளி வகுப்பை முடித்த அனைவரும் மேல் உயர் பள்ளிக்கு வந்ததும் இந்தக் கலையைக் கற்றுத் தந்தனர். கத்தியுடன் வருகிற எதிரியை வீழ்த்தித் தோற்கடிக்கும் கலை இது. உடல் உறுதி, மன பலம், மனக் கட்டுப்பாடு, லட்சிய நோக்கு இவற்றை அதிகம் வளர்க்கும் இந்தக் கலை, மேல்நாட்டுப் பயிற்சி முறைகள் வந்து கலந்தபோது, மக்களிடம் இடமிழந்து போனது. - ஜூடோ சீனாவிலிருந்து வந்த ஜியூ ஜிட்ஷ எனும் தற்காப்புக் கலையை சற்று மாற்றி, ஜூடோ என்று பெயரிட்டுப் பயின்றனர். இதனை இவ்வாறு உருவாக்கியவர் ஜீஜீரா கானோ எனும் ஜப்பானியர். வருகிற எதிரியை வலிமையுடன் எதிர்த்து, கீழே வீழ்த்தும் முறைகளில் ஜியூ ஜிட்ஷி இருந்தாலும். அதிலுள்ள வன்முறைகளைக் களைந்துவிட்டு, தெளிந்த, தேர்ந்த நிலையில் உருவாக்கப்பட்ட ஜூடோ இன்று ஒலிம்பிக் பந்தயத்தில் ஒன்றாகத் திகழ்கிறது. பள்ளிகளில் இதைக் கற்றுத் தந்தால், மாணவர்களிடையே மோதல்கள் அதிகம் நிகழும் எனப் பயந்து, அதிகம் வற்புறுத்தாமல் விட்டு விட்டனர் என்றும் கூறப்படுகிறது.