பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 221 1. பள்ளிகளில் பின்பற்றப்படுகிற தரமான உடற்கல்விப் பாடத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. - 2. பாடத்திட்டத்தைத் தடையின்றிப் பயிற்றுவிக்க பயிற்சிப்பெற, வேண்டிய அளவு வசதிகள் செய்துதரப் பட்டன. 3. பள்ளிகளில் மாணவர்கள் எழுதும் தேர்வுகளில் உடற்கல்விப் பாடமும் ஒன்றாக வைக்கப்பட்டது. 4. உடற்கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களை உருவாக்கும் பயிற்சிப் பள்ளிகளும் அரசாங்கத்தால் நிறுவப்பட்டன. - 5. தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்ற அளவில் எழுச்சிபெற்றது. அதனால் 1932, 1936, 1948ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில், சீனாவும் அதிக ஆர்வத்துடன் பங்கு கொள்ளும் வகையில் உடற்கல்வி உயர்ந்த முன்னேற்றம் கொண்டு விளங்கியது. 6. பெண்கள் உடற்கல்வி பெறுவதில் தடையேதும் இல்லாமல் இருந்தது. பள்ளிக் கூடங்களில் பயிலும் மாணவிகள், பல்வேறுபட்ட உடற் கல்வி, உடற்பயிற்சி செயல்களில் பங்குபெறுவதில், ஆண்களுக்கு இணையாக, அத்தனை உரிமைகளையும், வசதிகளையும் பெற்றுக் கொண்டனர். பெண்களுக்காகவே சிறப்பான உடற் கல்விப் பாடதிட்டம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அந்த அடிப்படையில் பயிற்சிப்பெண்கள். 1936ம் ஆண்டிலிருந்து, தேசிய தனித்திறன் போட்டிகளில் (Anthletic Meets) பங்குபெற்றுத் தங்கள் பெருமைகளை வெளிப்படுத்திக் காட்டினர். -