பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பொதுமக்களும் உடற்கல்வியும் பள்ளிகளில் மாணவ மாணவிகள், உடற்கல்வியினை உயர்ந்த முறையிலே பெற்றுக் கொண்டும் கற்றுக் கொண்டும் தெளிந்ததுபோலவே, பொதுமக்களும் உடற்கல்வியில் ஈடுபட்டு இணையற்ற களிப்பெய்தினர். பொதுமக்கள் விளையாட்டுக்களில் தான் அதிகமான ஆர்வத்துடன் பங்குபெற்றார்கள். சமுதாயம் முழுவதும் விளையாட்டுக்களில் பங்குபெறுகின்ற முயற்சிகளில் விளையாட்டுக்கழகங்கள் ஈடுபட்டன. இதற்கான பின்னனியை அரசாங்கமும் ஆதரித்து உதவின. 1939ம் ஆண்டு, ஒரு சட்டத்தை அரசு இயற்றியது அந்தச் சட்டமானது, ஒவ்வொரு முனிசிபாலிடியும் குறைந்தது ஒரு பொது ஆடுகளத்தையாவது (Public Play Ground) அமைத்திருத்தல் கட்டாயமானது என்பதாகும். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9ந்தேதியன்று உடற்கல்வி விழா ஒன்று நடத்தப்பெறும் என்பதுதான். - அமைதியான வாழ்க்கை நடந்தபோது, உடற்கல்வியும் விளையாட்டுக்களும் மக்கள் மத்தியில், மாணவ மாணவியர் மத்தியிலும், நடைபெற்றது. போர்க்காலங்களில் அதற்கேற்ற வாறு மாற்றியமைக்கும் சூழ்நிலையும் எழுந்தது. நாடு போரில் ஈடுபட நேர்ந்தபோது, மக்கள் வலிமை யுள்ளவர்களாக விளங்கவேண்டும் என்ற வேட்கையுடன் மக்களுக்கு உடற்கல்வி என்ற நடவடிக்கையில் இராணுவ உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன. நாட்டின் அவசர கால நிலைக்கு இராணுவ உடற்பயிற்சி முறையே சிறந்த தீர்வாக அமைந்திருந்தது.