பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இளஞ் சிறார்களின் சுகாதாரத்தில் சீன அரசு மிகவும் எச்சரிக்கை மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. உடற்கூறு வல்லுநர்கள், மற்றும் உள நூல் வல்லுநர்களை கலந்தாலோசித்து, அவர்களது அறிவுரை ஆலோசனையின் படி, சிறுவர்களுக்கு ஜிம்னாஸ் டிக்ஸ் வகுப்புக்கான வசதிமுறைகள் வரையறுக்கப்பட்டு, நன்கு போதிக்கப்படுகின்றன. - சீன தேசம் முழுவதும், விளையாடுவதற்கேற்ற ஆடுகளங்கள், ஜிம்னேஷியங்கள், நீச்சல் குளங்கள் எல்லாம் செம்மையான முறையிலே அமைக்கப்பட்டிருப்பதுடன், பயன் படுத்தி பலன் பெறுகிற பக்குவ நிலையில் மக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றனர். பயிற்சிகளிலும், போட்டிகளிலும் பங்கு பெறுபவர் களுக்கு வேண்டிய வசதிகளையும் வாய்ப்புகளையும் அளித்திருப்பது போலவே, பார்வையாளர்கள் அமர்ந்து கண்டு, களித்து ஆரவாரித்து மகிழவும் வசதிகளை அமைத்துத் தந்திருக்கிறது சீன அரசு. வசந்த காலத்திற்குப் பிறகு பொழிகிற மழையிலே மூங்கில் மரங்கள் முதிர்ந்து விளைந்து கொழிக்கின்றன என்னும் சீன மொழிக்கு ஏற்ப, வந்து மகிழவைக்கும் விளையாட்டுக் களினால், மனித இனமே மாபெரும் மறுமலர்ச்சியை அடைகின்றது. அது சீனாவுக்கு மிகவும் பொருத்தமான முதுமொழியாக அமைந்திருக்கிறது. வளர்ந்து வரும் உடற்கல்வி, உடற்கலை, கலாச்சாரம் மேலும் மக்களிடையே வளர, வேண்டிய அளவுக்கு உடற் கல்வி ஆசிரியர்களை உருவாக்கும் பணியில் அரசு முனைந்து, அதற்கேற்றவாறு பயிற்சி நிறுவனங்களை நிறுவியிருக்கிறது.