பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 229 ஆதிகால எகிப்திய மக்கள் யாவரும் சுறுசுறுப்பான வர்கள். எதிலும் ஆர்வம் கொண்டு, அவற்றைச் செயல் படுத்துவதில் சிரத்தை மிக்கவர்களாகவும் விளங்கினார்கள்; அத்தகைய உடல் உரத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக, அவர்கள் பலதரப்பட்டப் பல்வேறு வகையான உடற் 藝 虧 ■ . . பயிற்சிகளிலும் ஈடுபட்டார்கள்.

பிரபுக் குடும்பத்தினருக்கும். பணக்கார வர்க்கத் தினருக்கும் அவரவர்களுக்குரிய பண்ணைப்பரப்புகளில் நீச்சல் குளங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அத்துடன் நில்லாது, மல்யுத்தம், குட்டிக்கரணம் போன்ற சாகசப் பயிற்சிகள், சிலம்பம் போன்ற ஒரு கம்பு ஆட்டம், காளை அடக்கும்போட்டி (Bul Fight) மற்றும் பல வகையான பந்து விளையாட்டுக்கள் இவற்றில் ஆதிகால எகிப்தியர்கள் ஈடுபட்டும்.கிழ்ந்தார்கள். Ł நாடுகாக்கும்போர்வீரர்கள் கூட, தாங்கள் செய்து வருகிற கடுமையான இராணுவ உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலும், பல்வேறு பட்ட பந்து விளையாட்டுக்களிலும் பங்கு கொண்டார்கள். இப்படி பங்கு பெற்று விளையாடுவது, அவர்களது போரிடும் திறன்களில் உள்ள நுணுக்கங்களில் நன்கு தேர்ச்சி பெற உதவும் என்பதாகவும் அவர்கள் நம்பினார்கள். போரிடும் சிப்பாய் வகுப்பினர் (Warrior class) தாங்கள் செய்த பயிற்சியையும், ஆடிய விளையாட்டுக் களையும் தங்கள் பரம்பரையினரும் (குழந்தைகளும்) பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் விரும்பியிருக்கிறார்கள். சிப்பாய்களின் குழந்தைகள், இராணுவப் பள்ளிக்கு அதே நோக்கத்தில் தான் அனுப்பப்பட்டார்கள். அங்கே