பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்களுக்கு மிகவும் கடுமையான உடற்பயிற்சிகளும், மிகவும் சிரமமான போர்ப்பயிற்சி முறைகளும் கற்பிக்கப் பட்டன. அத்தகைய கடுமையான பயிற்சிகள் அவர்களது உடல் பலத்தை வளர்க்கவும், நெஞ்சுரத்தை அதிகப்படுத்தவும், நீடித்துழைக்கும் ஆற்றலை மிகுதிப்படுத்தவும், உதவின. அத்துடன், போரிலே ஆயுதங்களைத் திறமையாகப் பயன்படுத்தும் தேர்ச்சியளிக்கவும் துணையாக இருந்தன. எகிப்தியர்களிடத்திலே வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருந்ததால், அவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்களாக விளங்கினார்கள். நடனம் அவர்களிடையே முக்கிய அங்கம் வகித்தது. முன்னாள் எகிப்து நாட்டின் விளையாட்டு முதிர்ச்சி யானது, இந்நாளில் அதிகம் இல்லாதது நமக்கு ஆச்சரியமாகத் தானிருக்கிறது. - இந்நாளைய எகிப்து உடற்கல்வியானது, நாடுதழுவிய பொது உடற்கல்வியாகத் திகழ்கிறது. அதற்கு ஒரு கட்டுப் uri G) el#Ismfi (Controller) நியமிக்கப் பட்டிருக்கிறார். இவரது முக்கிய பணியானது, பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்குப் பயன்படும் வகையில் உடற்கல்விப் பாடத்திட்டங்களையும், இராணுவப்பயிற்சி முறைகளையும் ஆய்ந்து தெரிவு செய்து பயிற்றுவிக்க ஏற்பாடு செய்து தருவது தான். a நாட்டின் மத்திய அரசு கல்வி அமைச்சகத்துடன் நன்கு தொடர்புகொண்டு, நாட்டின் பல்வேறு விளையாட்டுக் கழகங்களுடன் இயைபுப்படுத்தி, சிறப்பாக உடற்கல்வி விளையாட்டுத்துறை செயல்பட இவர் இணைப்புப் பாலமாக ಡಿಅಕಣ சிறப்பாகப் பணியாற்றுகிறார்.