பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 233 மற்றும் இதிகாசங்கள், ஆங்காங்கே அரிதாகத் தென்படும் கல்வெட்டுக்கள், சாசனங்கள் ஓவியம் சிற்பம் இவைகளின் மூலமாக நாம் ஏற்றமிகு செய்திகள் பலவற்றை, சுவைபடவே அறிந்து கொள்ள முடிகிறது: இந்தியாவின் ஏற்றமிகு உடற்கலை. வரலாற்றை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிய முடிகிறது. என்றாலும் இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் உடற்கல்வி இருந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இந்தியர்களின் வாழ்க்கையில் உடற் கல்விக் கலை இரண்டறப் பின்னிப் பிணைந்து கிடந்திருக்கிறது. அதாவது, மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே உடற்கல்வி வாழ்க்கையாக உலா வந்திருக்கிறது என்பது தான், உண்மையான வரலாறாக நமக்குப் புலனாகின்றது. நமது இந்திய முன்னோர்கள் செய்து வந்த யோகா சனங்கள். பிராணாயாமப் பயிற்சிகள், பஸ்கித் தண்டால்கள், மல்லர் கம்பப் பயிற்சிகள், லெசிம், சிலம்பப் பயிற்சிகள் எல்லாமே, வாழ்க்கையின் அடிப்படைக் காவியங்களாகவே நடைப்பெற்றிருக்கின்றன. பழங்கால இந்தியர்களின் வாழ்க்கை முறையை நாம் மூன்று விதமாகப் பகுத்துப் பார்க்கும் பொழுது, அவர்களின் பண்பாடும், பாரம்பரியமும், மகோன்னதமான மரபுகளும்; மாண்புகளும், விளக்கமாகவே வெளிப்படுகின்றன. கலங்கரை விளக்கமாகவே காட்சியளிக்கின்றன. /. இந்தியர்களின் கலாச்சாரம் (Culture) எளிமையான வாழ்க்கை. உயர்ந்த சிந்தனைகள், என்பது தான் இந்தியர்களின் இனியவாழ்க்கைத் தத்துவமாக இருந்து வந்திருக்கிறது. இந்த அடிப்படையில் தான் அவர்கள் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.