பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 243 எல்லாதரத்து மக்களிடையேயும் சூதாடும் பழக்கம் இருந்திருக்கிறது. இதை வெளிப்படுத்திக் காட்டுகிறது மகாபாரதக்கதை, மகாபாரத யுத்தமே. சூதாட்டத்திலிருந்து தான் தோன்றி, தொடர்ந்து, முற்றி, வெறியூட்டி சண்டைபோட வைத்திருக்கிறது. மகிழ்ச்சி தரும் தீய பழக்கம் ஒருபுறம் இருக்க, அறிவு எழுச்சியை வளர்க்கும் அறிவுக் கலைகள் வளர்ச்சியும் மறுபுறத்தில் வளர்ந்தோங்கியிருக்கின்றன. தட்சசீலம், பாடலிபுத்திரம், கன்னோஜ், மிதிலை போன்ற நகரங்களில் கல்விக் கூடங்கள் பல இருந்தன. அவற்றில் வரலாறு போற்றுகிற மேதைகள் பலர் ஆசிரியர்களாக இருந்திருக் கின்றனர். = இந்தக் காலக் கட்டத்தில் தான் வான சாஸ்திரம், சோதிடம், தத்துவம், விவசாயம், இசை, நடனம் போன்ற ஆய கலைகள் பற்றியெல்லாம் விரிவாக குறிப்புக்கள் எழுதப்பட்டன. 3. சரித்திர காலம்: (கி.மு.100) இந்தியாவில் மிகப் பழமையான மதமாக விளங்கிய இந்து மதம், தழைத் தோங்கி தலைமை பீடத்தை வகித்த நிலையிலிருந்து கீழ்ப்புறமாக சரியத் தொடங்கிய காலம் என்று இதைக் கூறலாம். இந்து மதமானது இதமாக ஏற்றுக் கொண்டிருந்த சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் பேதங்கள் விதி இனப் பிரிவுகள், வைதிக பிராமணர்களின் தழும்பேறிய தடித்தன மான பழக்க வழக்கங்கள்; வேதங்களின் சுலோகங்கள் சொல்லி வந்த சனாதன முறைகள் யாவற்றையும் எதிர்த்துக் குரலெழும்பிய காலம் இது.