பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒன்றாக உயர்ந்த நோக்குடன் பரந்து விரிந்து கிடந்த பாரத நாடு, சிறு சிறு நாடுகளாக சிதறுண்டு போய், சிறுை அடையத் தொடங்கிய காலமும் இதுதான். ■ நூற்றுக் கணக்கான சிறு சிறு நாடுகளை ஆண்ட மன்னர்கள், மனதில் மமதையும் அகந்தையும் தலைதூக்க, மற்றவர்களை மாற்றார்கள் (பகைவர்கள்) என்று எண்ணி, அடிக்கடி போரிட்டுக் கொண்டு அறிவிழந்த கதையும் இந்தக் காலத்தில் மிகுதியாகவே நடைபெற்றது. இந்த சந்தடி சாக்கில், இந்து மதத்தை எதிர்த்துப் புதிய மதங்கள் பல தோன்றின, அவற்றுள் அருமையும் பெருமையும் கொண்டதாக, மக்கள் மத்தியிலே மாபெரும் மதிப்பும் சிறப்பும் பெற்றவை இரண்டு மதங்கள் 1. புத்த மதம் 2. ஜைன மத்ம். இந்து மதத்தின் மேல் மக்கள் கொண்டிருந்த இனம் புரியாத வெறுப்பு ତଓ பக்கம். மன்னர் குலத்தில் தோன்றிய தோன்றல்கள். புத்தர், மகா வீரர், இருவரின் தனிப்பட்டச் சிறப்பு இன்னொரு பக்கம். மக்கள் கூட்டம் இந்து மதத்தை வெறுத்து, புத்த ஜைன மதங்களில் சேரத் தொடங்கியது. அதனால், இந்து மதத்தில் இருந்து வந்த வாழ்க்கை முன்னேற்றி வளம் தரும் கொள்கைகள் பல, தூக்கியெறியப் பட்டன. மதமே வேண்டாம் என்றால், மதத்தின் கொள்கைகளை யார் மதிப்பார்? புத்த மதமும், ஜைன மதமும் அகிம்சை, அமைதி என்கிற கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தன. அதன்படி, உடலைக் கட்டு மஸ்தானதாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை மக்கள் விட்டு விட்டனர். நாட்டைக் காக்க வேண்டியதற்காகத் தங்கள் தேகத்தை வளர்த்துக் காப்பாற்றும் போக்கையே மக்கள் மறந்தனர்.