பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இராணுவம் இருந்தது, அவர் பல நாடுகளை வென்று, கடைசியாகக் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, அதில் வெற்றி பெற்றாலும், மனம் மாற்றம் பெற்று போரையே வெறுத்தார் என்பதாக வரலாறு விரித்துரைக்கிறது. - இந்த வரலாற்றுக் காலத்தில், இராணுவப் பயிற்சி முறைகள் மக்களிடையே ஆழமாகவும் விரிவாகவும் இடம் பெற்றிருந்தன என்றே அறியலாம். 4. நாளந்தா காலம்: (கி.பி.300) புத்த மதத்தினர் போற்றி வளர்த்து வந்த நாளந்தா பல்கலைக் கழகம் பற்றி, சீன யாத்திரிகர் ஒருவர், மிகச் சிறப்பாக எழுதிச் சென்றிருக்கிறார், ஏறத்தாழ் 6000 மாணவர்களுக்கு மேல் இங்கு கல்வி பயின்றிருக்கின்றனர். பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் படிப்பதற்காகவே இங்கு வந்தனர் என்பது ஒரு சிறப்பான குறிப்பாகும். மதம், வேதம், இந்தியதத்துவம் இவற்றை மட்டும் கற்றுக் கொள்ளாமல், வலிமையான உடலுக்காகவும் மாணவர்கள் பல பயிற்சிகளிலும். விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் ஆடிய விளையாட்டுக்கள் பற்றி ஒரு பட்டியலையே போட்டுக் காட்டியுள்ளனர். 1. நீச்சல், 2. தரையில் கட்டம் போட்டுத் தாண்டிக் குதித்தல், 3. பந்து விளையாட்டுக்கள், 4. வில்வித்தை, 5. கோலிக்குண்டு விளையாட்டுக்கள். 6. தேர் ஓட்டப் போட்டி, 7. யானையேற்றம், 8. குதிரைக்கு முன்னே ஓடும் ஓட்டப் போட்டிகள், 9. கை அழுத்தி வலிமை பார்க்கும் போட்டி, 10. மல்யுத்தம், 11. முஷ டியால் போடும் குத்துச்சண்டை முதலியன. * தட்சசீலா எனும் இடத்தில் இருந்த பழங்கால புத்த பல்கலைக் கழகத்தில், மிகச் சிறந்த இராணுவப் பயிற்சிகளும்