பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி - 247 அளிக்கப்பட்டன என்றும் வரலாறு மிகவும் புகழ்ந் துரைக்கிறது. உடலை ஒப்பற்ற முறையில் வைத்துக் காப்பதற்காக, மாணவர்களும் மக்களும் மேற்கொண்ட முயற்சிகளில், பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் போன்ற பயிற்சிகள் முக்கிய இடம் வகித்தன. இவை அன்றாடம் புரிகின்ற அவசியக் கடமை போல, அனைவராலும் பின்பற்றப்பட்டன. புத்த சந்நியாசிகளும், புத்த மதப் போதகர்களும் நெடுந்துாரம் நடந்து. பிச்சையெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அது அவர்கள் மதம் போதிக்கும் தலையாய கொள்கையாகக் கொண்டிருந்தது. எனினும் நீண்ட தூரம் நடக்கும் நடைப் பயிற்சிகள், அவர்களை நலமான உடல் உள்ளவர்களாக மாற்றி, உயர் வாழ்வு வாழ உதவியது. 5. ராஜபுத்திரர் காலம் (கி.பி. 300 முதல் 1200 வரை) - இந்தக் காலக் கட்டத்தில், இந்து மதம் புத்துயிர் பெற்று, மீண்டும் தனது பழம்பெருமையைப் பெறத் தொடங்கியது. ராஜபுத்திர வம்சம் தலைதூக்கி, தேசத்தை ஆளுகின்ற வாய்ப்பினைப் பெற்றது. அவர்களோ அனைத்து நேரமும் போரிடும் வீரர்களாகவே மாறி விட்டிருந்தனர். அவர்கள் தங்களையே தலைவர்களாக மதித்துக் கொள்ளும் தற்பெருமை நிறைய கொண்டிருந்ததால், அந்த நினைவைத் தற்காத்துக் கொள்வதற்காக மற்ற மன்னர்களுடன் யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆழ்ந்து கிடந்தனர். * - அவர்களுக்குள்ளே ஒற்றுமையில்லை. ஆயிரமாயிரம் பிரிவுகள், ஒருவருக்கொருவரை ஒழித்துக் கட்டுவதிலே