பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி - 249 குதிரையேற்றம்; வேலெறிதல்; அம்பு விடுதல், வில்வித்தை, வேட்டையாடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்றவைகள் அவர்களிடையே பிரபலமான விளை யாட்டுக்களாக விளங்கின. இசையுடன் நடனமும் அவர்கள் வாழ்க்கையில் இணையற்ற கலைகளாக விளங்கின. மதசமபந்தமான விழாக்கள் அவர்களின் மகத்தான பற்றினைப் பிரதிபலித்தன. சதுரங்க ஆட்டத்தில் ராஜபுத்திரர்கள் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். 6. முகமதியர் காலம் (கி.பி. 1200 முதல் 1750 வரை) இந்துக்களின் காலத்தில் இருந்த விளையாட்டு வேகத்தைப் போல, முகமதியர் காலத்திலும் முழுவேகம் பெற்றிருந்தது என்று வரலாற்றுக் குறிப்புக்கள் விவரமாகக் கூறிச் செல்கின்றன. உடலியக்கச் செயல்கள் எதுவாக இருந்தாலும், எப்படி அவற்றை மேற்கொண்டிருந்தாலும், அவற்றின் முனைப்பானது, தனிப்பட்ட ஒரு மனிதனைப் போருக்குத் தயார் செய்வதற்காகவே என்ற லட்சியத்துடன் தான் அவைகள் இருந்தன. இந்துக்கள் மேற்கொண்டவை எதுவாக இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டு, புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற ஓர் ஏறுமாறான அமைப்பு, முகமதியர்களிடம் சற்று கூடுதலாகவே காணப்படுகிறது அதனால் தான், யோகாசனங்கள் போன்ற சில பயிற்சி முறைகள் மக்களிடமிருந்து பின்வாங்கிப் போகுமளவுக்குக் காரியங்கள் நடைபெற்றன. வெற்றியும் பெற்றன.