பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 251 mom ஆட்டக்காரராக விளங்கியிருக்கிறார். பாசிசி என்ற தாயம் போன்ற ஆட்டத்திலும் அக்பர் மிகவும் ஆர்வம் காட்டியிருக்கிறார். முகமதியர் காலத்தில், போருக்கு மக்களைத் தயாராக்கும் வகையில் வேறுசில விளையாட்டுக்களும் இடம் பெற்றிருந்தன. தனிப்பட்ட இருவருக்கு சண்டைப் போட்டி வைத்து, அதில் யாராவது ஒருவர் காயம் அடைந்துகளைக்கும் வரை அல்லது இறக்கும் வரை, சண்டையிடச் செய்து சந்தோஷம் அடைந்திருக்கின்றனர். சில சமயங்களில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சண்டை போட வைத்து, அதில் இரத்தம் கொட்டும் போது, கண்டு அளவிலா ஆனந்தம் அடைந்திருக்கின்றனர். 7. ஆங்கிலேயர் காலம்: (கி.பி. 1947) வரை இந்தியாவில், இந்தக் காலக் கட்டத்தில் ஆண்ட மன்னர்கள் விளையாட்டுக்களிலும் உடற் பயிற்சிகளிலும் விழுமிய ஆர்வம் கொண்டிருந்தனர், மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற பழமொழிக்கு ஏற்ப, மன்னர்கள் மேற்கொண்ட பயிற்சிகளைப் போலவே, மக்களும் பயிற்சிகள் செய்து, வலிமையுடன் விளங்கினார்கள். விஜய நகரத்தை (1509 - 1531) ஆண்ட கிருஷண தேவராயர், உடற் பயிற்சிகளை செய்து உரமுள்ளவராகத் திகழ்ந்து, தன் குடிமக்களுக்கும் அந்த ஆர்வத்தை வளர்த்தார். சத்ரபதி சிவாஜிக்குக் குருவாக விளங்கியவர் ரீ ராமதாஸ் சுவாமிகள் அவர் ஒரு நாளைக்கு 1200 சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்து வந்தார். என்றும், அவர் நாடு முழுவதும் பயணம் செய்து, அனுமானைத் தெய்வமாக ஏற்கவும், ஜிம்னேவியம் கட்டவும் மக்களை உற்சாகப்