பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா போகின்ற ஆங்கிலக் கல்வி முறையில் ஆவேசமான மோகம் ஏற்பட்டதும், மற்றொரு முக்கிய காரணமாகும். தண்டால், பஸ்கிகள் கர்லா கட்டை சுழற்றல், மல்லர் கம்பப் பயிற்சிகள்தாம் அகாடாக்களில் இருந்து வந்த இந்தியட் பயிற்சிகளாகும். ஆங்கில உடற்கல்வி முறையின் ஆதிக்கம்: ஆங்கிலேயர்கள் பொதுவாக விளையாட்டு விரும்பிகள் ஆவார்கள். இயற்கையாக அமைந்த இந்த விளையாட்டுப் பற்றுதான், அவர்களை உலக அளவிலே ஆட்சி செய்கிற அறிவாற்றலையும், ஆண்மையையும் வளர்த்துவிட்டிருந்தன. ஆனால், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த காலத்தில், பள்ளிக்கல்வி முறையில் உடற்கல்விப் பாடத்திட்டங்கள் இடம்பெறவேண்டும் என்கிற நினைவு, கிஞ்சித்தும் இல்லாமலேயே காலத்தைக் கடத்தினர். 1833ம் ஆண்டு, கல்விதுறையைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் உரிமையை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இருந்தாலும் 1870 ம் ஆண்டு வரை, எந்த முறையையும் சிறப்பான வகையில் செயல்படுத்தவில்லை. 1870ம் ஆண்டு, கல்வித்துறையானது மாநில அரசுகளின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்டிருந்தாலும், இந்திய மைய அரசே அதனைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இருந்தாலும், எந்த விதமான முன்னேற்றமும் உடற்கல்வித் துறையில் ஏற்படவேயில்லை. 1882ம் ஆண்டு, இந்தியக் கல்வித்துறை கமிஷன் ஒன்று நிறுவப்பட்டது. உடற்பயிற்சியானது இந்தியநாட்டு உடற் பயிற்சிகளான ஜிம்னாஸ் டிக்ஸ், டிரில் போன்ற பயிற்சி