பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 255 -r!~ -o முறைகளை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகளில் போதிக்கப்படவேண்டும் என்று அந்தக் கமிஷன் அறிவார்ந்த பரிந்துரை ஒன்றை அரசுக்கு வழங்கியது. இந்தப் பரிந்துரையானது, இளைஞர்களிடையே இனம் புரியாத ஓர் உற்சாகத்தையும், உவப்பையும் விளைத்துத் தந்தது. 1894ம் ஆண்டு, உடற்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கும் முயற்சி ஒன்று மேற்காள்ளப்பட்டது. என்ன காரணமோ தெரியவில்லை, அந்த முயற்சியானது ஆரம்பக் கட்டத்திலேயே முறியடிக்கப்பட்டுவிட்டது. மேற்கத்திய விளையாட்டுக்களான போலோ, வளைகோல் பந்தாட்டம், கிரிக்கெட் போன்ற ஆட்டங்கள் கட்டாயமாக மக்கள் மத்தியிலே புகுத்தப்பட்டன. அவைகளை ஆனந்தமாக இந்திய மக்கள் இருதரம் நீட்டி ஏந்திக் கொண்டனர். இருந்தாலும், இந்தியநாட்டு உடற்பயிற்சிகளையும் விளையாட்டுக்களையும் விழாமல் காத்து, வீரியத்துடன் வளர்க்கும் முயற்சியில் ஒரு சில தனிப்பட்ட அமைப்புகள் உழைத்தன. உயர்ந்த நன்னோக்குடன் ஈடுபட்டன. அவைகளில் ஒரு சில அமைப்புகள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம். /. நீஹனுமான் வியாயம் பிரசாரக் மண்டல்: இந்த அமைப்பை அமராவதி நகரில் ஆரம்பித்து வைத்தவர் பூரீ அம்பாதாஸ் பன்ட் வைத்யா என்பவர். இந்திய உடற்கலை பற்றிக் கற்பிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வகுத்து ஒரு புத்தகம் எழுதி, அதற்கு போடக் (Bodak Patrak) புத்ரக் என்று பெயரிட்டு வெளியிட்டார்.