பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 1925ம் ஆண்டு, இயோட்மால் எனும் இடத்தில் நடை பெற்ற ஒலிம்பிக் தொடர் போட்டிகளுக்கு 122 பேர்கள் அடங்கிய ஒரு குழுவை அனுப்பிய பெருமை, இந்த மண்டலுக்கு உண்டு. இந்த மண்டலின் ஆலோசனையாலும், ஆதரவாலும் அரவணைப்பாலும் அநேக அகாடாக்களும், வியாயம் சாலைகளும் ோன்றின என்பது இதன் பெருமைக்குரிய பணிகளாகும். 1936ம் ஆண்டு மேற்கு ஜெர்மனி பெர்லினில் நடைபெற்ற அகில உலக விளையாட்டுப் போட்டிகளின் போது, காட்சிப் போட்டியாக கபாடி ஆட்டத்தை நடத்திக் காட்டிய புகழ் அனுமான் வியாயம் பிரசாரக் மண்டலுக்கு உண்டு. - ஸ்வீடன் தேசத்தில் 1953ம் ஆண்டு நடைபெற்ற லிங்கியாட் எனும் உடற்பயிற்சிக் காட்சிகளுக்கு, இந்தியாவின் சார்பாக, ஆங்கே இந்திய உடற்கலைகளைப் பற்றி நடத்திக்காட்டிப் புகழ் சேர்த்தப் பெருமையும் இதற்கே உண்டு. 2. ஜம்மாதாதாவியாயம் மந்திர்: பேராசிரியர் ராஜரத்ன மனோக்ராவ் என்பவர் இந்தக் கல்விக் கோயில் எனும் அர்த்தம் உள்ள வியாயம் மந்திரை ஆரம்பித்து வைத்தார். பம்பாய் நகரில் உள்ள முனிசிபல் பள்ளிகளிலும், வேறுபல பள்ளிகளிலும் உடற்கல்வி நடத்தப்பட, பாடத்திட்டங்களை வகுத்துத் தந்து வளர்ச்சிபெறச் செய்த பெருமை இவருக்குண்டு. 3. கைவல்யதாமா பம்பாய் மாநிலத்தில் உள்ள லோனாவாலா எனும் இடத்தில், சுவாமி குவலயானந்தா என்பவரால் இந்நிலையம்