பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 259 பாதையில் உடற்கல்வித்துறை முயன்று பல அடிகளை எடுத்து வைத்து வெற்றி கண்டது. - ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நமது உடற்கல்வியின் நிலைபற்றி இன்னும் சற்றுத் தெளிவாகத் தெரிந்து கொள்வோம். ஏறத்தாழ 200 ஆண்டுகள், இந்திய நாட்டை தங்களது ஆட்சிக்குள் ஆங்கிலேயர்கள் அடக்கி வைத்திருந்தார்கள். இந்த நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை அவர்கள் கையிலெடுத்த பிறகு, இந்தியர்கள் ஆயுதம் ஏந்துவதைத் தடைசெய்யத் தொடங்கிவிட்டனர். இந்தியர்கள் வலிமை யோடு வாழ்வதையும் ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை. உடற்பயிற்சிகள் செய்வதையும், கத்திச்சண்டை, குறுவாள் சண்டை, ஈட்டியெறிதல், போன்றவற்றைப் பழகுவதும் அவர்கள் ஏற்கவில்லை என்பதால், நாட்டில் மக்களின் வலிமை நாள்தோறும் தேய்பிறை போல தேய்ந்து போகத் தொடங்கியது. - ஆங்கிலக் கம்பெனியின் சட்டதிட்டங்களுக்கேற்ப, அடிமை நாட்டில் கல்வி பரவுவதை அவர்கள் நிச்சயமாக விரும்பவில்லை என்கிறபோது, உடற் கல்வியின் நிலை என்ன ஆகும்? - கம்பெனியின் ஆட்சி அதிகாரம் யாவும், இங்கிலாந்து ராணியிடம் சென்ற பிறகு. மேற்கத்திய கல்விமுறைக்குத் தான் இங்கே மதிப்பு ஏற்பட்டது. உடற்கல்வி முறைகள் ஒரு சிலவற்றை பள்ளிகளில் அறிமுகப்படுத்தினாலும், அங்கே போதிய நிதித்தொகை இல்லாத பற்றாக் குறை காரணமாகவும், நேரமின்மை காரணமாகவும், வெற்றிகரமாக செயல்பட முடியாமற் போயிற்று.