பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நமது நாட்டில் ஜெர்மன் நாட்டிலிருந்து மக் லாரன் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறைகளான இணைக்கம்பங்கள், (Parallel Bars) Glåmsäläio,G\b &lbură1561 (Horizontal Bars) ஊசலாடும் வளையங்கள் (Rings) யாவும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஸ்வீடன் நாட்டு லிங் உடற்பயிற்சிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அணிநடை, சீரான (ரித்மிக்) உடற்பயிற்சிகள் உள்ள டென்மார்க்கு நாட்டு உடற்பயிற்சிகள் மற்றும் இங்கிலாந்து விளையாட்டுக்கள் கூட பள்ளிகளில் சேர்க்கப்பட்டன. இருந்தாலும் எதுவும் வெற்றிபெறவில்லை. அதற்கும் பல அடிப்படை காரணங்கள் இருந்தன. 1. ஒரு வாரத்திற்கு ஒரு வகுப்புதான் உடற்கல்விப் பாடத்திற்காக ஒதுக்கப்பட்டது. அதுவும் 40 அல்லது 50 நிமிடங்கள் தான் உண்டு. வாரம் ஒரு வகுப்பில் என்னதான் கற்றுத்தந்து விடமுடியும்? 2. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி சாதனங்கள் ஒன்றிரண்டு தான் பள்ளிகளில் இருந்தன. ஒரு வகுப்பில் 50 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பொழுது, ஒவ்வொரு மாணவனுக்கும் ஒருமுறை பயிற்சி செய்யக் கூட வாய்ப்பு இல்லாமல் இருந்ததால், அந்தப் பயிற்சிகளைச் செய்ய மாணவர்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்படும்? மாணவர்களின் வெறுப்பும் உடற்கல்வித் தோல்விக்கு ஒரு காரணமாகும். - 3. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் செய்யும்பொழுது கீழே விழுந்து ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்கிற பயம்; மகிழ்ச்சியும் கேளிக்கையும் இல்லாத சப்பற்றப் பயிற்சிகள். 4. கெட்டிக்கார ஒரு சில மாணவர்களுக்கே அதிக வாய்ப்பு தந்து, அவர்களையே கவனித்துக்கொண்ட