பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 265 தொடங்கியது. அதற்கு லட்சுமிபாய் தேசிய உடற் கல்விக் கல்லூரி என்ற பெயர். அது தேசிய விளையாட்டு மற்றும் 2_Lspä6065 seisolotillets (Society for National Institute of physical Education and sports - Snipes) 5 (BL Limilliq 60 நடத்தப் பெற்றுவருகிறது. 10. இந்திய மத்திய அரசின் கல்வித்துறையானது, 1958ம் ஆண்டு, ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்கியது (Separate Division). அந்தச் சிறப்புப் பிரிவானது உடற் கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் இளைஞர்களின் நலம் பற்றிய நல்லதோர் வளர்ச்சிக்கு நயமான வழிமுறைகளை வகுத்துத்தந்தது. 11. உடற்கல்விக் கல்லூரி முதல்வர்களுக்கிடையே கருத்தரங்கு; உடற் கல்வி ஆய்வர்களுக்கு இடையே கருத்தரங்கு, பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குநர்களுக் கிடையே கருத்தரங்கு; உடற்கல்வித் துறை நிபுணர்கள், வல்லுநர்களுக்கிடையே கருத்தரங்கு. இப்படியாக, பல்வேறு நிலைகளில் உள்ள அறிஞர்களை ஓரிடத்தில் ஒன்று கூட்டி, உடற் கல்வியின், மேன்மையான வளர்ச்சிக்குரிய வழிவகைகளைக் கண்டறிய, மத்திய அரசு கல்வித் துறை 1958, 1959ம் ஆண்டுகளில் முயன்றது. அதற்குரிய பலன்கள் அருமையாகவே நடந்தேறின. 12. அதே சமயத்தில், பல அறிஞர்கள் அடங்கிய ஆய்வுக் குழுக்களை அமைத்து, உடற்கல்விக் கல்லூரிகளின் உண்மையான தரத்தையும் உழைக்கும் திறத்தையும், கல்லூரியின் செயல் முறைப் பாங்குகளையும் அறிந்து கொண்டு, அவற்றின் வளர்ச்சிக்குரிய நிதி உதவிகளை அளிக்கும் திட்டத்தையும் மத்திய கல்வித்துறை மேற் கொண்டது.