பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27Ο டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 1909ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான இந்த இயக்கம் ஆரம்ப நாட்களில் ஐரோப்பா மற்றும் ஆங்கிலோ இந்திய இளைஞர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. அதன் பிறகே இந்திய இளைஞர்களுக்குப் போய்ச் சேர்ந்தது. இந்தியாவில் சாரண இயக்கம் செழித்தோங்கத் தொண்டாற்றியவர் திருமதி அன்னிபெசன்ட் அம்மையார் ஆவார். வரலாறு போற்றும் அளவில் வளர்ச்சியுற்றதால், இந்திய இளைஞர் சாரண இயக்கம் என்ற ஒரு அமைப்பு 1916ம் ஆண்டில், சென்னை மாநகரில் தொடங்கப் பெற்றது. அது போலவே, 1918ம் ஆண்டு, சேவா சமிதி இளைஞர் சாரணக் கழகம் என்ற ஒரு அமைப்பு, அலகாபாத் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1921ம் ஆண்டு, சாரண இயக்கத்தின் தந்தையான பிரபு பேடன் பவுல், இந்தியாவிற்கு வருகை தந்து. பல்வேறு இடங்களைப் பார்வையிட்டுப் பெருமை சேர்த்த நிகழ்ச்சியானது, சாரண இயக்கத்தின் பெரு வளர்ச்சிக்கு அடி கோலியது. 1. இந்திய சிறுவர் சாரணக் கழகம் 2. இந்திய சிறுமியர் சாரணக் கழகம் 3. இந்துஸ்தான் சாரணக் கழகம் என்னும் முப்பெரும் கழகங்கள் நாட்டில் சாரண இயக்கத்தை வலுப்படுத்தி, வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு கொண்டிருந்தன. - 1950ம் ஆண்டு மத்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றி வந்த மெளலானா அப்துல் கலாம் ஆசாத்