பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி s 275 o- _---_-_■ மாணவர்களை உடலாலும் மனதாலும், உணர்வு பூர்வமாகவும் வளமானவர்களாக மாற்றி, சிறந்த குடிமக்களாக வழிநடத்தும் இலட்சியத்தை ஊட்டும் முனைப்பினைக் கொண்டிருந்தது. தாய் நாட்டுப் பற்று, கூடி செயலாற்றும் குழுப் பற்று, சமுதாயத் தொண்டு, உழைப்பை மதிக்கும் பண்பு இவற்றை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகள் இருந்தன. பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 13 வயது முதல் 16 வயதுள்ள மாணவ மாணவிகள் இதில் சேர்ந்து பயிற்சிகள் பெற்று, பலனடைந்தனர். பயிற்சி முறைகளில் உடற்பயிற்சி, சிறு சிறு விளையாட்டுக்கள், முதலுதவி முறைகள், கலை முதலான கைத் தொழில் பயிற்சிகள் கலாச்சார செயல்கள், பொழுது போக்கும் காரியங்கள், சிறு ஆயுதங்களைக் கையாளும் முறைகள் யாவும் கற்பிக்கப்பட்டன. ஏறத்தாழ 12,280 பள்ளிகளில் இந்த இயக்கம் மிகவும் கம்பீரமாக செயல்பட்டு வந்தது. - உடற்கல்வியின் அறிமுகம், தேசிய தற்காப்புத் திட்டம், போன்ற பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டதால், தொண்டுகள் பல புரிந்து வந்த துணைப்படை (Acc) கொஞ்சங் கொஞ்சமாக மதிப்பிழந்து, மறையத் தொடங்கியது. தேசிய தற்காப்புத் திட்டம் (National Discipline Scheme) சுதந்திரத்திற்குப் பிறகு, நமது நாட்டைச்சுற்றிலும் உள்ள நாடுகளின் பல பகுதிகளிலிருந்து, அகதிகள் ஆயிரக் -