பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கணக்காக வந்து குவிந்த நேரம். அதனால் இந்திய தேசம் பெற்ற அவதிகளும் பிரச்சினைகளும் ஆயிரக் கணக்கில் மிகுந்தன. இதன் விளைவாக, நமது நாட்டு இளைஞர்களுக் கிடையே காட்டுப்பாடற்றத் தன்மைகள் மலிந்து வளரத் தொடங்கின. அகதிகள் மத்தியில் இத்தகைய அடங்காத் தன்மை, போராட்ட வெறி, மற்றும் சண்டை சச்சரவுகளும் இருந்ததும், இத்தகைய கட்டுப்பாடற்ற சூழ்நிலைக்கும் காரணமாயின. காட்டாறாகத் திரியும் அகதிகளைக் கட்டுப்படுத்தவும், நாட்டு இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் பற்பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்பொழுது அகதிகள் நிர்மாணத்திற்காக, U.K. போன்ஸ்லே (J.K. Bhonsle) என்பவர்; துணைமந்திரியாக மத்திய அரசால் நியமிக்கப் பட்டார். அகதிகள் மத்தியிலே கட்டுப்பாடு எழவும், குழப்பங்கள் நீங்கவும், பற்பல உடற்கல்வி மற்றும் கலாச்சார, நிகழ்ச்சிகளை நடத்திட போன்ஸ்லே திட்டமிட்டு நடத்திக்காட்டி, அதில் எதிர்பார்த்த வெற்றியையும் பெற்றார். அப்படிப்பட்ட கலாசார நிகழ்ச்சிகளில் அகதிகளும், அவர்களது குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்குபெற்றனர், அவர்களுக்கிடையே அமைதி நிலவியதுடன், ஆனந்தமும் பெருகின. - பிரச்சினைகளுடனே பிரலாபித்த அகதிகளும் மற்றவர்களும் நடத்திக்காட்டிய கலாச்சார நிகழ்ச்சிகளின் அருமையைக் கண்ட அந்நாள் பிரதமர் ஜவகர்லால்நேரு அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் அளிக்கலாமே என்று அபிப்ராயப் பட்டார்.