பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 5. மாணவர்கள் தங்களுக்குரியனவற்றை தாங்களே பெற்று பிறரை அண்டி வாழாமல் சுயபலத்துடன் வாழல் (Self reliance) மற்றவர்கள் மீது கருணை காட்டல், மதித்தல், தியாகம் செய்திடும் மனப்பக்குவம் பெறுதல் போன்ற அற்புதக் குணங்களை வளர்த்தல். பாரத தேசத்தின் பல்வேறு மாநிலத் தலைநகர்களில் இந்தத் திட்டத்திற்கான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப் பட்டன. இதற்கு ஆகும் செலவுகளை மத்திய அரசே ஏற்று செலவழித்தது. н இம்மையங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள். தேசியத் தற்காப்புத் திட்டப் பயிற்சி ஆசிரியர்கள் என்ற பெயரில், பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டனர். எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட இந்தத் திட்டத்தை ஏனோ தெரியவில்லை - தமிழக அரசு மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. ார் திட் டமும் பயிற்சிகளும் இத்திட்டத்தில் பல்வேறு பயிற்சி முறைகள் இடம் பெற்றிருந்தன. இராணுவ உடற்பயிற்சிகள், அணிநடைகள், வெறும் உடற்பயிற்சிகள், இந்திய தேகப் பயிற்சி முறைகள்: தாயகப்பற்றை வளர்க்கும் பாடல்கள்; கூட்டுப் பாடல் முறைகள், உணர்ச்சியூட்டும் பாடல்கள்; நாட்டு ஒருமைப்பாட்டை ஊட்டி வளர்க்கும் பாடல்கள், கிராமப்புற சமுதாயப் பாடல்கள், கிராமிய நடனங்கள் தேசியகீதம் போன்றவைகள் இத்திட்டத்தில் போதிக்கப்பட்டன. 1960ம் ஆண்டு, போன் ஸ்லே அவர்கள் திடீரென காலமாகிவிட்டதால், கவனிப்பாரற்றுப் போன இந்தத் திட்டம்,