பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 279 கீழ்நிலையை அடையத் தொடங்கி, கொஞ்சங் கொஞ்சமாக, மறைந்து போனது. 1962ம் ஆண்டு, சீனப்படையெடுப்பு நிகழ்ந்தபோது, அந்தத் திட்டம் கொஞ்சம் ஆதரவு பெற்ற போதிலும், நீடித்து வாழ்ந்து, எழுச்சியுடன் நடத்துகிற நிலைமை அடையாமற் போனது வருந்தத்தக்கதேயாகும். தேசிய உடல்திற இயக்கம் (National Fitness Corps) இந்தியா சுதந்திரம் எய்துவதற்கு முன்பிருந்த கல்வி அமைப்பில் உடற்கல்வியின் நிலை, இருட்டில் திரிகின்ற கறுப்புப் பூனையின் காட்சி போலவே இருந்தது. அதை ஏறெடுத்துப் பார்த்தும். ஏற்றதைச் செய்யும் அதிகாரிகள் யாரும் இல்லை. இருந்தாலும், அவர்கள் கொண்டிருந்த அக்கறையெல்லாம், மாற்றாந்தாய் மனப்பாங்கிலே தான் செயல் வடிவம் பெற்றிருந்தது. அந்நிய ஆதிக்கம் அன்னை பூமியை விட்டு அகன்ற பிறகு, விடுதலை பெற்ற பாரத பூமியில், உடற்கல்வியின் உன்னத நிலையைப் பற்றி, உண்மையான தேசபக்தர்கள் பலரும் உணர ஆரம்பித்தார்கள். நாட்டில் வாழும் இளைஞர்களின் நற் காலமும் பொற்காலமும், உடற்கல்வியின் ஒப்பற்ற வளர்ச்சியில் தான் உறைந்து கிடக்கிறது என்கிற இனிய உண்மையை எல்லோரும் புரிந்திருந்தனர். அதனாலே தான், அவர்கள் பலம் கொடுக்கும் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்திப் பார்த்தனர். தேசிய மாணவர் இயக்கம், துணைப்படை, தற்காப்புத் திட்டம் (N.C.C. A.C.C.