பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 281 2. விரும்பி ஏற்கும் பாடத்திட்டங்களில், சாரணச் செயல்கள், மலையேற்றம், விளையாட்டுக்கள், நாடகம், இசை, சமூகசேவை, அனுபவச் செயல்முறைகள் போன்றவை இடம்பெறவேண்டும். 3. தேசிய தற்காப்புத் திட்டம், துணைப்படைத் திட்டம் போன்றவற்றை நீக்கிவிடலாம். - - 4. பல திட்டங்களில் முன்னதாகப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களுக்கு மேலும் சிறப்புப் பயிற்சிகள் தந்து, அவர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5. மாணவர்களுக்கு சீருடையை அறிமுகப்படுத்திட வேண்டும். தேசியக்கொடியை கொடிக்கம்பத்தில் ஏற்றுதல், இறக்குதல், பாதுகாத்தல் பெருமைபடுத்துதல் போன்றவற்றில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல் வேண்டும். 6. தேசிய மாணவர் படை இயக்கத்தை, கல்லூரி மாணவர்களுக்கிடையே பிரபலப்படுத்திட வேண்டும். என்கிற சிறந்த கருத்துக்களின் பட்டியலை, மத்திய அரசுக்கு குன்சுரு சமர்ப்பித்தார். 7. உடற்கல்வி மற்றும் பொழுது போக்கு மத்தியக் குழுவானது குன் சுருவின் கருத்துக்களைக் கேட்டறிந்து, ஆமோதித்து ஏற்றுக்கொண்டு, பற்பல திட்டங்களின் பொறுப்பாளர்களாக இருந்த அலுவலர் அனைவரையும் அழைத்து, ஒரு புதியதிட்டத்தை உருவாக்கி, அதற்கு தேசிய உடல்திற இயக்கத் திட்டம் (N.F.C.) என்று பெயரிட்டனர். தேசிய உடல்திறத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் 1. எல்லா நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளிலும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கட்டாயமாக்கப்பட்டது.