பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி


இதை மற்பேரர்பள்ளி என்றும்,சிருடற்பயிசிப் பள்ளி (Gymnastics) என்றும், அழைப்பார்கள். இதில் சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து, ஒருங்கே பயிற்சிகள் பெற்றனர்.

ஓட்டம், தாண்டுதல், வேலெறிதல், தட்டெறிதல், மற்போர், குத்துச்சண்டை போன்ற திறம் சார்ந்தப் போட்டி முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. அவற்றின் மேன்மைக்கு மெருகேற்றும் வகையிலேதான் பள்ளிகளும் உருவாக்கப் பட்டிருந்தன.

இப்பள்ளிகளானது, சிறந்த வசதிகளும், கற்போருக்கு நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும் வகையிலே அமையப் பெற்றிருந்தன. பயிற்சிக்காக நீந்த, பயிற்சிக்குப் பிறகு குளிக்க, உடை மாற்ற, பயிற்சி செய்ய என்பன போன்ற வசதிகள் நிறைந்த வண்ணமே எல்லாக் கட்டிடங்களின் வடிவமைப்பும் செய்யப்பட்டிருந்தன.

பாலஸ்டிரா பள்ளியின் கட்டட அமைப்பு, நடு மையத்தில் திறந்த வெளியாக இருக்க, அதைச் சுற்றிலும் பல அறைகள் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையும் உடை மாற்றிக்கொள்ள, எண்ணெய் பூசிக்கொள்ள, பயிற்சி செய்ய, பொழுதுபோக்காக பயன்படுத்த, மசாஜ் செய்ய, குளிக்க என்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு அறை என்பதுபோல, வட்டமாகச் சுற்றிச் சுற்றி அறைகள் கட்டப்ப்பட்டிருந்தன.

இத்தகைய வட்டவடிவமான பகுதியிலிருந்து வேடிக்கை பார்ப்போர் சுற்றிச் சூழ்ந்திருந்த, மத்தியில் உள்ள சமதளப் பாப்பில் தான் (Court) மற்போர், குத்துச் சண்டை, தாண்டம் எறியும் போட்டிகள், மற்றும் சீருடற்பயிற்சிகள் எல்லாம் நடைபெற்றன. சாதாரண நேரங்களில், மேற்கூறிய பயிற்சிகள், போட்டிக்குரிய நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த அடுகளப்பரப்பில் தான் கற்றுத் தரப்பட்டன.