பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இந்திய ஒலிம்பிக் கழகம் என்பது மிகவும் வலிமை வாய்ந்த கூட்டமைப்புக் கழகமாகும். இதில் பல முக்கிய விளையாட்டுக் கழகங்கள் யாவும் உறுப்பினர்களாக உள்ளன. பயிற்சி நிறுவனங்களும் பயிற்சி முகாம்களும்: தேசிய அளவில் பயிற்சி முகாம்களை அமைத்து, விளையாட்டுக்களை விருத்தி செய்கிற முன்னேற்பாடு திட்டம் 1953ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இதற்கு ஆதார கர்த்தாவாக விளங்கியவர் ராஜ்குமாரி அம்ரிட் கெளர் என்பவர். இவர் அந்நாள் மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சராவார். இவர் ஏற்படுத்திய பல தேசியப் பயிற்சித் திட்டங்கள் நாட்டில் நல்ல பலன்களை ஏற்படுத்தியதுடன், வேறுபல விளையாட்டுக்களுக்கும் நாடு முழுவதும் பயிற்சி முகாம்கள் அமைய வழி வகுத்துத் தந்தது. அயல் நாடுகளிலிருந்தும் அறிவாற்றல் மிக்கச் சிறப்புப் பயிற்சியாளர்கள் (Coaches) பலர் வரவழைக்கப் பட்டனர் பயிற்சி முகாம்களில் பணியாற்ற வைத்தனர். எதிர்பார்ப்புகள் இனிதாகவே நடந்தேறின. ராஜ்குமாரி பயிற்சித் திட்டத்தின் அடியொற்றி, அகில இந்திய விளையாட்டுக் கழகம் (AICS), குறுகிய காலப் பயிற்சி முகாம்களை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தத் தொடங்கியது. அதில் உடற்கல்வி ஆசிரியர்களே அதிக அளவில் பங்கு கொண்டனர். அவர்களை அந்தந்த மாநிலங்களும், பல்கலைக் கழகங்களும் தேர்ந்தெடுத்து, அனுப்பி வைத்து புது உத்திகளையும் திறன் நுணுக்கங் களையும் பெற்றுக் கொள்ள உதவி செய்தன.