பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 291 இவ்வாறு தனித்தனியே, ஆங்காங்கே நடத்தப் பெற்றப் பயிற்சி முகாம்கள் எதிர்பார்த்த விளைவுகளையும் மாற்றங்களையும் ஏற்றங்களையும் தராததை அறிந்த மத்திய அரசு, ஒரு குறிப்பிட்ட இடத்தில், தேசிய அளவில் பயிற்சி முகாம் போன்று நடத்தினால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்து, அவ்வாறே செயல்பட விழைந்தது. இந்த நேரத்தில், இந்திய வீரர்கள் வீராங்கனைகளின் தரமானது அகிலஉலக அளவில் கடைத்தரமாக இருப்பதையும் கவனத்தில் வைத்திருந்த மத்திய அரசு, அதற்கு மாற்றாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற சிந்தனையுடன், ஒரு தற்காலிகக் குழுவை நியமித்தது. அந்தக் குழுவோ நன்கு சூழ்நிலைகளை நாணயமான நோக்குடன் அலசி ஆராய்ந்து, ஒரு பரிந்தரையை அளித்தது. அதாவது, ஒரு மத்திய பயிற்சிக் கழகம் ஓரிடத்தில் நிலையாக அமைக்கப்பட வேண்டும் என்பதுதான். இந்தக் குழு பரிந்துரைத்து தந்த ஆண்டு 1959. - இந்தப் பரிந்துரையை ஏற்று, அகில இந்திய விளையாட்டுக் கழகம் (AICS) தேசிய பயிற்சி நிறுவனம்(NIS) என்ற பெயரில் 1961ம் ஆண்டு பாடியாலாவில் ஏற்படுத்தியது. இந்தப் பயிற்சி நிறுவனத்தை அப்பொழுது மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த ரீமாலி என்பவர் தொடங்கி வைத்தார். தேசிய பயிற்சி நிறுவனம் எல்லா விளையாட்டுக்கள் பற்றியும் விஞ்ஞான பூர்வமான நுணுக்க முறைகளை, பயிற்சி பெறுபவர்களுக்கு அளித்து, அவர்களை சிறப்புப் பயிற்சியாளர்களாக (Coach) அனுப்பி வைக்கிறது. அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மாவட்ட விளையாட்டுக் கழகம், மாநில விளையாட்டுக்கழகம்