பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி - 293 நேற்றைய நிகழ்ச்சிகள் இன்றைய வரலாறாகிறது என்பார்கள். பல நூறு ஆண்டுகளாக பாரெங்கும் நடைபெற்று வந்த உடற்கல்வி நடைமுறைகளைத் தொகுத்து, உலக நாடுகளில் உடற்கல்வி என்று தலைப்பிட்டு, இதுவரை நாம் படித்து வந்தோம். - நடந்து முடிந்து போன நிகழ்ச்சிகளைத் தொகுத்து விட்டதனாலேயே நல்லது ஒன்றை நடத்திக் காட்டிவிட்டோம் என்று நம்பிக் கொண்டு, சோம்பி இருந்து விட்டால், அது உச்சி வெயில் பாலை மணலில் படுத்துக் கொண்டு, சொர்க்கப் பூமியில் சுகித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்பவரின் சோக நிலையாகப் போய் விடும். உலக வரலாறு எதற்கு என்றால், அது நம்மை வழிகாட்டி, வாழ்வாங்கு வாழ, வழி நடத்தும் பேராற்றலைப் பெற்றிருப்பதுதான் பெருமைக்குரிய காரணமாகும். 1. வரலாற்றைப் படிப்பது முற்காலத்தைப் புரிந்து கொள்ள. 2. முற்காலத்து நிகழ்ச்சிகளைத் தற்காலத்து நிகழ்ச்சிகளுடன் இணைத்துப் பார்த்து, ஒற்றுமை வேற்றுமைகளை உணர்ந்து, ஏற்றத் தாழ்வுகளைத் தெரிந்து. சரி பார்த்துக் கொண்டு, சரியான நிலையை சாமர்த்தியமாக மேற்கொள்ள.