பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 295 வரலாறு காட்டும் அனுபவங்கள். நமக்கு வற்றாத அனுபவ ஜீவநதியாக அல்லவா வந்து வளம் காட்டுகின்றன. தரம் கூட்டுகின்றன. 8. வரலாறு காட்டும் நிகழ்ச்சிகளில், மேதைகள் பலர் மேற் கொண்ட முயற்சிகள், முனைப்புகளை அழித்த சோதனைகள் தோல்விகளில் பெற்ற வேதனைகள்; அதற்குப் பிறகும் அவர்கள் சாதித்த சாதனைகள் எல்லாம் நம்மையும் அவர்கள் வழியில் நடக்கத் தூண்டும் தூண்டுகோலாக அமைகின்றன. 9. இவ்வளவு நிகழ்ச்சிகளும் செவ்வையாக அமைந்த சிறப்பு அம்சங்கள் என்று சிந்திக்கும் பொழுதெல்லாம், எண்ணங்களில் சிலிர்ப்பும், நடைமுறைகளில் மிடுக்கும் நேர்ந்திடுவதால், வரலாறு, நமக்குக் கிடைத்தத் தொகுப்பல்ல, நம்மை நயமாக வாழ்விக்கும் அற்புதப் புதையல் என்றே ஏற்று மகிழலாம். ஆய்வின் மறுபக்கம் உலக நாடுகளில் உடற்கல்வியின் வரலாற்றை இது காறும் நாம் படித்து வந்ததில், ஓர் உண்மை நமக்குப் பளிச்செனப் புலப்படுகிறது. மேலை நாட்டு மக்கள் இன்று மேன்மையான உடல் வலிமை பெற்று, மேம்பட வாழ்வதற்குக் காரணம். அவர்களின் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வந்த உடற்கல்வி வாழ்க்கை முறைகள் தாம். மூன்று நான்கு பரம்பரையாக செய்து வந்த உடற் பயிற்சி, அந்த உடற்கல்வி வாழ்க்கையின் முதிர்ச்சிதான், இன்றைய தலைமுறையினரின் ஏற்றமிகு திறமைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.