பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அதனால் தான் அவர்கள் வாழ்க்கைத் துறையில் செழிப்பில் மட்டுமல்ல. விளையாட்டுத்துறையில் வெற்றியும் வீரப்பதக்கமும் பெற்று, வீறுமிக்கப் புகழாளர்கள்ாகத் திகழ்கின்றார்கள். . . இந்த உண்மையைத் தான் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் நடத்தி வந்த உடற்கல்வி வாழ்க்கை முறை, இடைக் காலத்தில் இடுப்பொடிந்து போனது. அடக்கு முறைக்கு ஆளான வாழ்க்கை முறையாக வீழ்ந்த, அந்நியரின் ஆதிக்கத்தால் தளர்ந்து, தரம் கெட்டு திறமிழந்த போனார்கள். வசதியற்ற வாழ்க்கை நிலை, வரம்பு கெட்ட வாழ்க்கை முறையின் விளைவுகள் தாம் இன்று நாம் விழுந்து கிடப்பதற்கான முக்கிய காரணமாகும். விழித்துக் கொண்டு விட்டோம் நாம். விவரங்களையும் விஷயங்களையும் விளங்கிக் கொண்டு விட்டோம். - நமது நிலை என்ன? நாம் யார்? நாம் எங்கே இருக்கிறோம். என்பதை சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்து கொண்டு விட்டோம். இனி என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும். என்றெல்லாம் திட்டங்களும் தீட்டத் தொடங்கி விட்டோம். தேவையான ஆக்கப்பணிகளில் ஊக்கப் பணிகளில் தீவிரமாக செயல்படவும் தொடங்கி விட்டோம். நமது பரம்பரை நடத்தத் தொடங்கி விட்ட இந்தவேள்வி, நாளைய நமது பரம்பரையை நடத்திக் காட்டுவது மட்டுமல்ல, வீர வாழ்வையும் வெற்றி வாழ்வையும் விளைத்துக் காட்டும்.