பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 297 வேகத்தையும் விவேகத்தையும் முயற்சிகள் விளை விக்கும் என்பதைத் தான் உலக நாடுகளில் உடற் கல்வி என்ற வரலாறு நமக்கு வடித்துக் காட்டுகிறது. இந்த ஆய்வின் அருமையை அறிந்து கொண்டதுடன் அமைதி பெற்று ஓய்ந்து விடாமல், மேலும் மேலும் பெருமைபெற பெரும்பெரும் திட்டங்களைத் தீட்டி, தாய் நாட்டின் மேன்மையை சிந்தையில் ஏற்று, தியாகச் செம்மல்களாகப் பயிற்சிகள் செய்து, நம்மையும் வாழ்வித்துக் கொண்டு, நாட்டையும் உலகப்புகழ் உயர்வித்துப் புகழ் சேர்க்க வேண்டும் என்ற இலட்சிய வாழ்க்கையை நாம் மேற்கொள்வோமாக! உடற் கல்வியை உயர்த்திவிட்டுத் தாழ்ந்த நாடும் இல்லை உடற் கல்வியை வீழ்த்திவிட்டு உயர்ந்த நாடும் இல்லை. இதுதான் உண்மையிலும் உண்மையான கருத்தாகும். உண்மையை உணர்ந்து, உண்மையாக முயற்சிகளை மேற்கொண்டு, செம்மையாக வாழ்பவர்க்கு உலக அளவில் உண்மையான புகழும் பெருமையும் வந்து சேரும் என்பதே வரலாறு காட்டும் பாடமாகும். அவ்வழி செல்வது நல்ல அறிவாளர்க்கு அழகாகும்.