பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




சில நேரங்களில், ஓட்டம், தாண்டல், எறிதல் போன்ற பயிற்சிகள் எல்லாம், பள்ளிக் கட்டிடங்களுக்கு வெளியேயுள்ள பரந்த மைதானங்களிலும் நடைபெறுவதாக அமைந்திருந்தன.

பயிற்சிமுறையும் பொறுப்பாளர்களும்

இதுபோன்ற பாலஸ்டிரா பள்ளிகள் எல்லாம், பொதுவாக தனிப்பட்ட நிறுவனங்களாலேயே நடத்தப்பட்டன. அப்படிப்பட்ட பாலஸ்டிரா பள்ளியின் நிர்வாகிகள் அல்லது உரிமையாளர்களுக்கு பெய்டொடிரைப் (Paldotribe) என்று பெயர்.

மாணவர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு படிப்புத் தொகை (Fee) பெற்றுக் கொண்டு, பல்வேறு விதமான பயிற்சிகளையும் கற்றுத் தருகின்ற பெய்டோடிரைப் போன்றோர்கள், சகலகலா வல்லவர்களாகவே விளங்கி இருக்கின்றார்கள், அவர்கள் பல துணை ஆசிரியர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு, தங்கள் பள்ளிகளை நடத்தினர்.

பெரும்பாலும், மாணவர்கள் ஆடை ஏதுமின்றி பிறந்த மேனியர்களாகவே இருந்து, பயிற்சிகளைப் பெற்றிருக் கின்றனர்.

(ஆ)டிடாஸ்கேலியம் பள்ளி (Didascaleum)

இந்தப் பள்ளியில், இசையும் இலக்கணaleum)மும் கற்றுத் தரப்பட்டன.

பாலஸ் டிரா பள்ளிகள் போலவே, இப்பள்ளிகளை நடத்திப் பணியாற்றுகிற பொறுப்பும் தனிப்பட்டவர்களையே சார்ந்திருந்தன. இங்கேயும் படிப்புத்தொகை வசூலிக்கப்