பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



மீறினாலும்; அவர்களை என்னால் இயன்றவரை தடுத்திட முயல்வேன். என்னால் இயலாவிடில் மற்றவர்கள் உதவியுடன், மாற்றிவிடவும் முயல்வேன். எனது தந்தையர், மூதாதையர், மதித்துப் பின்பற்றி வந்த மதத்தை மதித்துப் போற்றுவேன். எங்கள் தெய்வங்களான அகரலாஸ்; எனியாலியஸ், ஏரஸ், சீயஸ், ஆக்டோ, ஹேசிமான் இவர்களைப் போற்றித் துதிப்பேன்.

இராணுவத்தில் சேர்ந்த ஒரு இளைஞன், 18 வயது முதல் 20 வயதுக்குள்ளாக, இரண்டாண்டு இராணுவ சேவைக்குள்ஆட்படுத்தப்படுகிறான்.

முதல் ஆண்டு இராணுவ சேவை என்பது - அவன் போராயுதங்களைத் திறம்படக் கையாளுவதற்கேற்றப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து, தேர்ச்சியடைவதுடன் ஒரு இராணுவ வீரனுக்குரிய எல்லா கடமைகளையும் செய்திட பழகிக் கொள்கிறான். அத்துடன், போர் நடனம், விளையாட்டுப் போட்டிகள் இவற்றில் கலந்து கொண்டு பெருமைகளை அடைகிறான். ஜிம்னாஸ்டிகஸ் பயிற்சி களையும் தொடர்ந்து செய்கிறான்.

இரண்டாவது ஆண்டு இராணுவ சேவை என்பது - அவன் பிற மாநிலங்களுக்குக் காவல் செய்யும் பொறுப்புடன் அனுப்பப்படுகிறான். போர் நடக்கும்போது, அவன் போர் வீரனாக மாறி, பொருதுகிறான் அந்தக் காலம் முடிகிறபோது, போர்கள் எதுவும் இல்லையென்றால், அவன் இராணுவ முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுகிறான்.

4. சுதந்திர இளைஞராக

இருபது வயது முடிந்த இளைஞர்கள், சுதந்திரபுருஷர் களாக நாட்டில் நடமாடும் வாய்ப்பினைப் பெறுகின்றார்கள்.அவர்கள் நாட்டு சட்டமன்றத்தின் அங்கத்தினராகவும் ஏற்றுக்