பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

47



பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெர்மன் தேசத்து, ஜிம்னாஸ்டிக் கல்வி முறையில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த கிரேக்கம், அதே நூற்றாண்டின் பின்பகுதியில் ஸ்வீடன் தேசத்து ஜிம்னாஸ்டிக் முறையைவிரும்பி ஏற்று வளர்த்துக் கொள்ளத் தொடங்கியது. இந்த ஏற்பு முறையானது இரண்டாவது உலக மகாயுத்தம் வரை தொடர்ந்தது. இந்த இடைக்காலத்தில், தனது பழைய ஆக்க பூர்வமான உடற்கல்வியையும், விளையாட்டுக்களையும் பரிபூரணமாகப் பெருக்கிட, முயற்சிகள் பலமுறை கிரேக்கம் மேற்கொண்டது. அதற்குப் பிறகு, 1927ம் ஆண்டு , டெல்பி எனும் இடத்தில், பழைய மரபுபடி, போட்டிகளை நடத்தியது. இசை, ஓடுகளப் போட்டிகளில் போட்டிகள் நடந்தன. இதற்கிடையில் 1896ம் ஆண்டு, புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் ஏதென்ஸ் நகரிலே நடத்தப்பட்டன. முதல் உதக மகாயுத்தம் நடைபெற்றபிறகு, Y.M.C.A. கழகத்தினரின் தாக்கம் அதிகமாகி, உடற்கல்வி முறை அதிக வளர்ச்சி பெற்றது. பள்ளிகளில் உள்ள கல்வி முறையில், உடற்கல்விப் பாடத்திட்டம் முக்கியமான இடம் பெற்றது. கட்டாய உடற்கல்வித் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்குக் கட்டாய மாகக் கற்றுத் தரப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கப் பயிற்றுவிப்பு முறை ஆரம்பிக்கப் பெற்று, உடற்கல்வியானது நாடெங்கும் பரப்பப்பட்டது. எல்லா வகையிலும் முன்னேற்றம் கண்ட கிரேக்கம், இரண்டு உலகப் போரிடையே இடருற்று, எழுந்து நிற்க இயலாத வண்ணம் வீழ்ச்சியடைந்து போனது. அத்துடன்,