பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அண்டை நாடுகளுடன் நடைபெற்ற எல்லைத் தகராறுகளும் உள்நாட்டுக் குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டன. ஆகவே, ஸ்திரமான நிலைமை நாட்டில் ஏற்பட ஏதுக்கள் இல்லாமல் போயின. அதனால், நாட்டில் இராணுவ ரீதியில் அமைந்த காலிஸ்தனிக்ஸ் உடற்பயிற்சிகள் (Calisthenics) கட்டாயமான பயிற்சி முறைகளாக ஆக்கப்பட்டன. இன்றைய கிரேக்கம் எப்படியிருந்தாலும், பண்டைய கிரேக்கத்தின் பீடும் பெருமையும் பார்புகழும் பராக்கிரமும், படிப்போரையும் கேட்போரையும் பெருமிதத்தில் ஆழ்த்தின. பிரமிப்பில் நிற்கச் செய்தன. செய்கின்றன. பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் பற்றிய செய்திகள் பாரையே பரபரப்பில் ஊட்டி, பராக்கிரமத்தில் வாழச் செய்த வரலாற்றை, அடுத்த அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்.