பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

49

2. ஒலிம்பிக் பந்தயங்கள்

விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம், நுண்கலை, இசை வளர்ச்சிக்குப் பண்டைய ' கிரேக்கமக்கள் பலப்பல தொண்டுகள் செய்திருக்கின்றனர். அவற்றிற்கு மணிமுடி வைத்தது போன்ற காரியம் தான் விளையாட்டுப் போட்டிகளை விமரிசையாக நடத்தி வந்ததாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உடற்கல்வியின் உண்மையான மகத்துவத்தை உணர்ந்து, ஓம்பிக் காத்து, உயர்த்தி, உயர்ந்து வாழ்ந்த பெருமைமிக்க கிரேக்கர்கள் வரலாறு, கனவுக்கும் அப்பாற்பட்ட கற்கண்டு செயல்களாகவே பெருக்கெடுத்தோடியிருக்கின்றன.

உடலால் வலிமை, மனதால் சுறுசுறுப்பு, சமூக உணர்வுகளில் ஒருங்கிணைந்த தொண்டு மனப்பாங்கு இப்படியாக அன்று கிரேக்க சமுதாயம் கீர்த்திப் பெற்றிருந்தது.

மனிதரின் முழு வளர்ச்சியில், முற்போக்கு எண்ணங்களை வளர்த்துக் கொண்ட கிரேக்கர்கள், விழா எடுத்துப் போற்றி போட்டிகளை நடத்தியதே ஒலிம்பிக் போட்டிகள் என்று பெயர் பெறலாயிற்று.

அத்தகைய ஒலிம்பிக் பந்தய வரலாற்றை நாம் அறியும் பொழுது, அதனை பழைய பந்தயங்கள் புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் என்று இரண்டாகப் பிரித்து, விளக்கமாகக் காண்போம்.உலக நாடுகளில் உடற்கல்வி 49

{{larger|1. பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் (Ancient olympic Games)}

பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் பிறந்த விதங்கள் பற்றி, ஆதாரபூர்வமான குறிப்புக்கள் எதுவும் இல்லையென்றாலும்,