பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


படுத்திய செயல் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.

இப்படிப் பட்ட புனித நாட்களில், பகைவர்களும் ஒன்றாக வந்திருந்து, அமைதி பாராட்டி, அன்பு செலுத்தி, இன்பமயமான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்தியது தான், இந்தப் பந்தயங்களின் சிற்பான அம்சமாகும்.

பழங்கால கிரேக்கர்களின் பகை உணர்வைத் தடுத்து, தொடர்ந்து நடக்கும் போர்களை நிறுத்தி வைத்து, எல்லாரையும் ஒற்றுமைப் படுத்துகின்ற உயர்ந்த பணியை, அக்காலத்திலேயே ஒலிம்பிக் பந்தயங்கள் ஆற்றியிருக்கின்றன. சக்தியை வளர்க்கும் தாயாக மட்டுமல்ல; சாகசங்களை வளர்க்கும் ஆசானாக, சமாதானத்தை நிலைநிறுத்தும் தூதுவனாக ஒலிம்பிக் பந்தயங்கள் உன்னத சேவைகளைப் புரிந்திருக்கின்றன.

போட்டியும் விதிமுறைகளும்போட்டியும் விதிமுறைகளும்

கிரேக்க நாடு முழுவதும் அறிவிக்ப்பட்டு, வீரர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள அவகாசம் அளித்த போதிலும். அந்தப் புனிதப் பந்தயங்களில் கலந்துகொள்வதற் கென்று, கடுமையான விதிகளை உருவாக்கி வைத்திருந்தனர். அந்த விதிகள் பின்வருமாறு

1. போட்டியில் பங்கு பெறுகின்ற உடலாளர்கள், தூய, கலப்பற்ற கிரேக்கக் குடிமகனாக இருக்க வேண்டும்.

2. போட்டிகளில் பங்கு பெறுவதற்காக, அந்தப் போட்டியாளர்கள் கட்டாயம் 10 மாதங்கள் கடுமையான பயிற்சிகளை செய்திருக்க வேண்டும்.

3. பொழுது போக்காக விளையாட்டுக்களை விளையாடும் உடலாளர்களே பங்குபெற முடியும். (Amateurs). விளையாட்டை வைத்து பணம் சம்பாதிக்கும் வணிக