பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் உடற்கல்வி

61


வெளிப்புறத்தில் தெரியும் சந்தில் ஒளிந்து கொண்டு பார்ப்பதையும், மரத்தில் ஏறி அமர்ந்து பார்ப்பதையும் சட்டம் கடுமையாகக் கண்டித்திருந்தது.

இந்தச் சட்டத்தை மீறிய பெண்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? மரண தண்டனை தான். மலையின் உச்சியிலிருந்து தூக்கியெறியப்படுகின்ற தண்டனையே மிகுதியாக வழங்கப்பட்டது.

பங்கு பெறவும், பார்வையாளர்களாக விளங்கவும் வாய்ப்பு வழங்கப்படாத பெண்கள் ஒன்று சேர்ந்து, தங்களுக்குள்ளே ஒலிம்பிக் பந்தயப் போட்டிகளைத் துவக்கி, நடத்தி மகிழ்ந்தார்கள்.

ஆண்கள் சீயஸ் கடவுளுக்காக பந்தய விழா எடுத்தார்கள் என்றால், பெண்கள் சீயஸ் கடவுளின் மனைவியான ஹீரா (Here) எனும் பெண் தெய்வத்தின் பேரில் ஆராதனை செய்து பந்தயங்களை நடத்தினார்கள். அதற்கு ஹீரகா (Heraca) என்பதாகப் பெயர் சூட்டினார்கள். இந்தப் பந்தயத்தை ஆரம்பித்து வைத்தவள் என்ற பெருமையைப் பெறுகிறாள் இளவரசி ஒருத்தி.

பெண்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பந்தயங்களை நடத்தினார்கள். ஆண்கள் பிறந்தமேனியராகப் போட்டிகளில் பங்கு பெற்றது போல, பெண்களும் இடுப்பிற்குக் கீழே அரை பாவாடை (கவுன்) அணிந்து கொண்டு, இடுப்பிற்கு மேலே திறந்த மேனியராக ஒடிஇருக்கின்றார்கள்.

    அவர்களும் காளை மாடுகளைக் கடவுளுக்குப்ப லி இட்டார்கள். ஆண்களைப் பார்வையாளர்களாக இருக்க அவர்கள் அனுமதிக்கவே இல்லை.