பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் உடற்கல்வி

65



பந்தயங்கள் கி.பி. 394ம் ஆண்டு, அரசாணை மூலம் அழிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து 1500 ஆண்டு காலம், இருந்த இடம் தெரியாமல், பல பரம்பரைகளைப் பார்க்காத நிலையில், பந்தயங்கள் மறைந்தொழிந்து போயின.

அதாவது கி.பி. 394ம் ஆண்டு முதல் கி.பி. 1859ம் ஆண்டு வரை எந்தவித ஒலிம்பிக் பந்தயமும் எங்கேயும் நடைபெறவில்லை.

கிரேக்கத்தின் கீர்த்தியை மீண்டும் மண்ணுலகில் நிலை நாட்டவேண்டும் என்ற நெருப்பான நினைப்புடன் நெருங்கிப் பார்த்தார் எவாஞ்சலிஸ் ஸப்பாஸ் (Evangellous Zappas) என்பவர்.

இரண்டு முறை ஒலிம்பிக் பந்தயங்களை நடத்திட முயன்று பார்த்தும், பெற்றது தோல்வியைத் தான். 1859ம் ஆண்டு ஒரு முறையும், 1870 ஆண்டு மற்றொரு முறையும், முயன்று பார்த்தார் ஸப்பாளல்.

வசதி படைத்தவராக விளங்கினாலும், விளையாட்டு உலகில் அவரது அனுபவமின்மை; உலக நாடுகள் அந்த நாட்டினரின் உள்ளுணர்வை நன்கு உணர்ந்து கொள்ளாத நிலைமை, பொருளாதார அடிப்படையில் அப்பொழுது கிரேக்க நாடிருந்த தாழ் நிலைமை எல்லாம் சேர்ந்து, ஒலிம்பிக் பந்தயங்களைப் புதுப்பிக்கும் முயற்சியின் வெற்றியை முனைப்புடன் வீழ்த்தி விட்டன.

இந்த இனிய முயற்சியே, 37 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய பந்தயங்களைத் தொடங்கும் முன்னோடி முயற்சியாக அமைந்துவிட்டிருந்தது.

உலக நாடுகள் அனைத்துக்கும் சுற்றுப்பயணம் செய்கின்ற வாய்ப்பும், அந்தந்த நாட்டுத் தலைவர்களை