பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

75


வெற்றிமேடையில் அந்த மூவரும் ஏறி நிற்க, அவர்களுக்குரிய பரிசுகள் வழங்கப்படும், முதல் நிலை எய்தி வெற்றிபெற்ற வீரர் மேடையில் நடுவில் உள்ள உயரப் பகுதியில் நிற்க, அவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

இரண்டாவதாக வெற்றி பெற்றவர் முதலாமவரின் வலப்புறம் உள்ள உயர் பகுதியில் நிற்க, அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும்.

மூன்றாமவர் முதலாமவரின் இடப்புற மேடையில் நிற்க, அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும்.

குறிப்பு: வெற்றி பெற்ற மூவரும் வெற்றி மேடையில் நின்ற பிறகு, அந்தந்த வீரரது நாட்டுத் தேசியக் கொடி கம்பத்தில் ஏற்றப்படும். அகில உலக ஒலிம்பிக் கழகத்தலைவர் அல்லது அந்தக் கழகத்தின் அங்கத்தினர்கள் அல்லது முக்கியமானவர்கள் யாராவது ஒருவர் அவர்களுக்கு ஆலிவ் மலர் வளையம் அணிவித்து, பதக்கங்கள் வழங்கியபிறகு, முதலாவதாக வெற்றி பெற்றவரின் நாட்டுத் தேசிய கீதம் இசைக்கப்படும்.

உயர் கௌரவம்

போட்டிகளிலும் விளையாட்டுக்களிலும் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், அந்தக் குறிப்பிட்ட ஒலிம்பிக் பந்தய அரங்கத்தின் சுவர்களில் அழியா நினைவுச்சின்னமாகப் பொறித்து வைக்கப்படும்.

அத்துடன், உலக ஒலிம்பிக் கழகத்தின் குறிப்பேடுகளில் அவர்கள் பெயர்கள், சாதனைகள் யாவும் சரித்திரமாக்கப்படும்.

முதல் 3 பேர்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கியது போல, 4,5,6ம் நிலை பெற்றவர் களுக்கு சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். பங்கு பெற்ற