பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



- - ~ r- ------ o -- |- - - -- - எல்லா போட்டியாளர்களுக்கும் நினைவுப் பரிசாக பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். பந்தயங்கள் முடிவுபெறுதல் 16 நாட்கள் பெரும் சிறப்புடன் போட்டிகளைக் கண்ட பந்தய விழாவானது, மிகவும் அமைதியான முறையில் முடிவுக்கு வரும். அகில உலக ஒலிம்பிக் கழகத்தின் தலைவர், தனது இறுதி உரையின்போது, பந்தயங்களை மிகவும் அருமை யுடனும் திறமையுடனும் நடத்தி முடித்த அமைப்பாளர்களைப் பாராட்டி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வார். பிறகு, அந்தக் குறிப்பிட்ட ஒலிம்பிக் பந்தயங்கள் முடிவுக்கு வந்ததென அறிவித்துவிட்டு, அடுத்துவரும் நான்காவது ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் பந்தயத்தில் வந்து. கலந்து கொள்ளுமாறு உலகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் அழைப்பை விடுப்பார். அடுத்து நடைபெற இருக்கும் பந்தயங்களை நடத்தும் நாட்டின் பெயரையும் வெளியிட்டு அழைப்பு விடுப்பார். அவரது அறிவிப்பு முடிந்தவுடன், வேறொரு ஒலிம்பிக் கொடியினை, அடுத்து நடத்தவிருக்கும் நாட்டின் நகர மேயரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த மேயர் அடுத்தப் பந்தயம் நடக்கும்வரை, ஒலிம்பிக் கொடியைப் பத்திரமாகப் பாதுகாத்துத் தருவார். இசைக் கருவிகள் முழங்க, ஏற்றப்பட்டிருக்கும் ஒலிம்பிக் கொடியானது கம்பத்திலிருந்து இறக்கப்படும் பொழுது, ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி மங்கி மறைந்து போகும். இவ்வாறு ஒலிம்பிக் பந்தய விழாவானது ஒப்பற்ற முறையிலே முடிவுக்கு வருகிறது.