பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 79 தீபம் ஏற்றும் முறை பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்ற இடத்தில் அமைந்துள்ள,ஹlரா எனும் பெண்தெய்வத்தின் பெருமை மிகு கோயிலில் தான், இந்த மரபு வழி தீபம் ஏற்றும் திருப்பணி தொடங்குகிறது. கிரேக்க நாட்டின் தேசிய தியேட்டரில் உள்ள நடிகை ஒருத்தி, பெண் மதகுரு (Priestess) வேடம், அணிந்து, குழிக் கண்ணாடியைக் காட்டி, சூரியன் ஒளியிலிருந்து நேரடியாக நெருப்பைப் பெற்று, அங்குள்ள தீப் பந்தத்தில் ஏற்றி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இளம் ஓட்ட வீரர்களிடம் அளிப்பாள். - அதன் பிறகு, ஆங்காங்கே ஒட்டக்காரர்களை குறிப்பிட்ட இடங்களில் நிற்கச் செய்து, தொடரோட்டமாக, ஓடச் செய்து, கடைசியாக ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறும் அரங்கத்திற்குக் கொண்டு வரச் செய்வார்கள். சில சமயங்களில், பந்தயங்கள் வேறு தேசங்களில் நடை பெற்றால், அதுவரையில் ஒலிம்பிக் தீபத்தை சிறிது சிறிது தூரம் ஓடுவதற்கு வீரர்கள் அநேகம் பேர்களை வைத்துக் கொள்வது பழக்கமாகக் கையாளப்பட்டது. பந்தயங்களை நடத்தும் பொறுப்பேற்ற நாடுகள், கிரேக்க நாட்டிலிருந்து அதிக தூரமாக இருந்தபோது, தரையின் மீது ஓடுவதைத் தவிர்த்து, ஆகாய விமானத்தின் மூலமாகக் கொண்டு செல்லும் ஏற்பாடுகள் இனிதே செய்யப்பட்டன. அதற்காக, ஒலிம்பிக் தீபம் அணையாதிருக்க விசேஷ லாந்தர்கள் (Lanters) உருவாக்கப்பட்டு, அதன் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது. - குறிப்பிட்ட நாட்டிற்குக் கொண்டு போகப்பட்ட தீபம், அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் வழியே, பல நூறு