பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 83. (3.ரோநோட்டில்'ட் கல்வி) ரோம் நாட்டினரை ரோமானியர் என்று அழைப்பது வழக்கம். இந்த ரோமானியர்கள் எல்லாவகையிலும் கிரேக்கர் களுக்கு எதிர் மாறாகவே வாழ்ந்தவர்கள் என்றுதான் வரலாறு விரித்துரைக்கிறது. வாழ்க்கையை இலக்கிய நயம்மிளிர, இயற்கையின் சுகம் திகழ, அழகைஆராதித்து, ஆற்றலை வளர்த்து, அரும் போரிட்டு வாழ்ந்தார்கள் கிரேக்கர்கள். ஆனால், ரோமானியர் களோ, தனிப்பட்ட தேகக்கட்டில் நம்பிக்கை யில்லாமல், எதையும் செயல் பூர்வமாக அணுகியே வாழ்ந்திருக்கிறார்கள். அதாவது, அவர்கள் சொல்லில் நம்பிக்கை வைக்காது, செய்து காட்டவேண்டும் என்பதில் சிரத்தை மிக்கவர்களாக வாழ்ந்தார்கள். எந்தக் கருத்தாக இருந்தாலும், அதை இலக்கிய நயமாகக் கேட்க அவர்கள் விரும்ப வில்லை. அது செயல் பூர்வமானதாக விளங்குகிறதா என்பதில்தான் அக்கறை காட்டினார்கள். அதாவது எந்தக் கருத்தாக இருந்தாலும், அது வாழ்க்கைக்குப் பயன் தருமா என்பதில்தான் கவனத்தை வளர்த்தார்கள். காரியத்தில் திளைத்தார்கள். இந்த இயல்புதான் அவர்களின் கல்வி முறையில் அதிகமாகப் பிரதி பலித்தது. அதிலும் உடற்கல்வி முறையெலாம் முற்றிலும் உடல் செயல் என்பதிலேதான் உலா வந்திருக்கிறது. ரோமானியர்களின் உடற் கல்வி வளர்ச்சியை நாம் இரண்டு முறைகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.