பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

89


ரோமானியர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் புரிவாழ்வு நிலை

இந்த இரண்டாவது காலக்கட்டத்தை கி.மு. 146ம் ஆண்டிலிருந்து கி.பி. 410ம் ஆண்டு வரை என்று சுட்டிக் காட்டுகின்றார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இந்தக் காலக் கட்டத்தில் ரோம் சாம்ராஜ்யத்தின் எல்லை மிகவும் விரிந்திருந்தது. பல நாடுகளை வென்று புகழுடன் வெகு தூரம் வியாபித்திருந்தது. இதனால் பல நாடுகளின் கலாச்சாரம் அரசியல், பழக்க வழக்கங்கள் பற்றிய கருத்துக்களை அறிந்து, அவற்றை விரும்பி பின்பற்றுகிற விதங்களிலும் மேலோங்கியிருந்தனர்.

கிரேக்கக் கலாச்சாரமும், கல்வி முறையும். கீழை நாடுகளின் தொடர்பும், ரோம் மக்களுக்கு அறிவின் வலிமையை மிகவும் உயர்த்தியிருந்தன. கிரேக்கப் பண்பாடு பயனுள்ளது, பெருமை தரத்தக்கது என்பதையும் அதிகார வர்க்கம் உணர்ந்து கொண்டிருந்தது.

புரியாத தாழ்வு நிலை

இருந்தாலும் சமுதாயத்தில் ஏனோ தெரியவில்லை, எதிர் பாராத மாற்றங்கள் கட்டுப் பாடின்றி நுழைந்து இடம் பிடித்துக் கொண்டன. அந்த சமுதாயமும் அரசும் பலமிழந்து போகின்ற அளவுக்கு, வளர்ச்சியைக் குறைக்கும் வழிகளிலே வாழ்வை அமைத்துக் கொள்ளத் தொடங்கின.

சமுதாய அமைப்பில், பொருளாதார அமைப்பில் புதிய புதிய சிந்தனைகளும் விளைவுகளும் விரிவட்டைந்து கொண்டேபோனதாலும், லஞ்சம், ஊழல், கையூட்டு, நிறைய இடம் பெற்றபோது மதக் கோட்பாடும் மரபுகளும், ஒழுக்க வழிகளும் மக்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு ஒதுங்கிப் போயின.