பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



கிரேக்க நாட்டிலே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் எல்லாம், தனி மனிதன் தேகபலத்தை நிலை நாட்டுவதற்கும், போட்டியிட்டு வெற்றி ஈட்டுவதற்காகவுமே நடைபெற்றன. ஆனால், ரோமானிய விளையாட்டு முறையோ வேறுவிதமாக இருந்தது. திரிந்தது.

ரோமானியர்கள் விளையாட்டு விழாக்களைத் தங்கள் அரசியல் வளர்ச்சிக்காக நடத்தினார்கள். பசித்துக்கிடக்கும் தமது பொதுமக்களின் கருத்துக்களைத் திசை திருப்பு வதற்காகவும், அவர்களை மகிழ்விப்பதற்காகவும் ஆக்ரோஷம் மிகுந்த, பயங்கரமான காட்சிகள் நிறைந்த விளையாட்டுப் போட்டிகளை அந்த அர சியல் வாதிகள் போட்டி போட்டு நடத்திக் காண்பித்தனர்.

பார்வையாளர்களும் பொதுமக்களும் இரத்தக் களறி நிறைந்த சண்டைகளை, திகிலூட்டும் போட்டிகளைக் காணவே தயாராக இருந்தனர். இதனை கொடுமையான போட்டிகள், (Gladiatorial Combats) என்று அவர்கள் அழைத்தனர். அதாவது நன்கு பயிற்சிபெற்ற சண்டைபோடும் ஒருவர், மனிதர்களுடனாவது அல்லது மிருகங்களுடனாவது பார்வையாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகப் போடுகின்ற சண்டை என்பது பொருளாகும். பயிற்சிப் பெறாதவர்களும் சண்டை போடுவதுண்டு.

இந்தப் போட்டிகள் நடைபெற, சுற்றிலும் இருக்கைகள் இருக்க, மத்தியில் மேல் திறந்த அரங்கம் (Amphitheatre) என்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்த அரங்கத்தினுள்ளே இரண்டுவீரர்கள் சண்டையிடு வார்கள். யாராவது ஒருவர் இறக்கும் வரை அந்தப் போட்டி தொடர்ந்து நடைபெறும்.

இந்தக் கொடுமை போதாது என்று மனிதனுக்கும் மிருகத்திற்கும் போட்டிவைத்து சண்டை போடச்