பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



உடற்பயிற்சியில் உண்மையான ஆர்வம் கொண்டு பழகிய பண்பாளர்கள், உடற்கல்வியை மக்களிடம் காட்சியாக செய்து காட்டி, வளர்த்தார்கள். (Demonstration). தாங்களும் தங்கள் வாழ்க்கையை நன்கு நடத்திக் கொண்டார்கள்.

தொழிற்முறை உடற்கல்வியாளர்கள், இராணுவ வீரர்கள் மட்டுமே, உடற்கல்வியில் ஒழுங்கான திட்டத்துடன் பயிற்சி செய்தனர். தசைபிடித்து விடும் கலைக்கு (Massage) வசதியுள்ளவர்கள் அடிமைகளை பயன்படுத்திக் கொண்டனர்.

தந்தையர்கள் உடற்கல்வி செய்யாமல் விட்டுவிட்டதால், அவர்கள் பிள்ளைகளும் உடற் கல்வியை செய்யாது அலட்சியப்படுத்தினர். அதனால், பிள்ளைகள் நல்ல உடற் பயிற்சியை இழந்ததுடன், உடல் தரத்திலும் திறத்திலும் நல்ல வலிமையை இழக்கத் தொடங்கினர்.

இவ்வாறு எல்லா நிலையிலும் கீழ்முகமாக இறங்கி வந்த ரோம சாம்ராஜ்ய ஆட்சி. தோல்வி முகம் கண்டு தளர்ந்து போனது. பின்னர் மற்ற நாட்டுக்கு அடிமையாகி மறைந்தே போனது. இப்பொழுது நிலவுகிற, தற்கால இத்தாலிய வாழ்க்கை முறையில், உடற்கல்வி எத்தகைய இடத்தைப் பெற்றது என்பதை இனி இங்கே காண்போம்.

புதிய இத்தாலியில் உடற்கல்வி

அரசர்கள் ஆட்சியெல் லாம் அகன்று, மக்களாட்சி மலர்ந்து, இது போன்ற பல மாற்றங்களைப் புதிய இத்தாலி பெற்று, புகழ் மிக்கதொரு வரலாறு படைத்தது. புதிய இத்தாலியில் உடற்கல்வியானது ஒரு சில புதிய யுக்திகளை வகுத்தது. புதுமைகளைப் படைத்தது.