பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அவர்கள் உடற் கல்வியை மிகவும் ஆர்வமூட்டும் வகையில், பணியாற்றி மேம்படுத்தினர்.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில், அணிநடை (Marching); உபகரணங்கள் மூலம் உடற் பயிற்சிகள்; கட்டுடற்பயிற்சிகள், (Callisthenics); முக்கிய முதன்மை விளையாட்டுகள், ஓடுகளப் போட்டிகள் (Track and field) போன்றவைகள் பிரதானமாக இடம் பெற்றன.

உடற் கல்விப் பயிற்சி பெற்ற பலர், பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியே அமைக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் (Clubs) போன்றவற்றிலும் சிறப்புக் கூட்டுப் பயிற்சிகள் போன்றவற்றைக் கற்பிப்பதற்காக, சிறப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் என்ற பெயரில் பணி அமர்த்தப் பட்டனர், அவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள் முதலானவர்கள் கீழ்க்காணும் செயல்களில் சிறப்புப் பயிற்சி பெறவும், அதைப் பெறவும். அதைப் பொது மக்களுக்கு நடத்திக் காட்டிடவும் ஏற்பாடு செய்து, கற்றுத் தந்து எழுச்சியூட்டினர்.

சீருடற்பயிற்சிகள் (Gymnastics); ஒடுகளப் போட்டிகள், (Athtletics), கூடாரம் அமைத்து வெளியிடங்களில் இருந்து, பலதரப்பட்ட உடல் இயக்க செயல்களில் ஈடுபடுதல் (Cam- ing); குளிர்கால விளையாட்டுக்கள் (Winter Sports); கடின உழைப்பில் தொழில் செய்தல் (Manual Labour); துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளைப் பெற, இளைஞர் பயிற்சித் திட்டம், திட்டமிட்டுக் கற்பித்தது, தேர்ச்சி பெற வைத்தது.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், பள்ளியைச் சாராத சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருககும் உடற்பயிற்சியுடன், ஒரு தலைவர் ஆட்சியை ஒப்புக் கொண்டு, உளமாரப் பணிந்து, அடங்கி நடக்கும்