பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

உலக வரலாற்றில்



ஐரிஷ் மக்கள் தங்களது தலைவரான டிவேலராவை, தங்களை உயர்வழியில் உயர்த்துபவராகவே கருதிவந்தனர். ஆனால், சில நாட்களுக்குள் அதைப்பற்றிய ஒரு சிறிய சந்தேகம் சிலரிடம் தோன்றிவிட்டது.

அதனால், அயர்லாந்தில் ஒரு சிறு பொறி விரைவில் ஒரு சுடராக வளர்ந்து, அந்தச் சுடர் சுவாலையாகி விடும். டிவேலரா முற்போக்கினருக்குத் தம்மை எதிரியாகக் காட்டிக்கொண்டார்.

முன்புள்ள ஆட்சியினர் ஏற்படுத்திய இராணுவ மன்றத்தை ஏற்படுத்திக் குடி அரசினரை அதன் மூலம் விசாரிக்க ஏற்பாடு செய்துள்ளார். குடி அரசு வாரப் பத்திரிக்கையை அடக்கி இருக்கிறார்.

மற்ற நாட்டில் அவர் நிலையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அப்படிப்பட்ட செய்கைகள் அவசியமாய் இருக்கலாம். ஆனால், அயர்லாந்தில் எவ்வளவு திறமை மிக்க அரசியல் தலைமையும் பல நூற்றாண்டுகளாகக் கனன்று கொண்டு, இடையிடையே சுடர் விட்டு எரிகின்ற முழு ஆர்வத்தீயை எதிர்க்குமாயின் அது வெற்றிபெறாது.

இந்த நூற்றாண்டின் அயர்லாந்து நாட்டின் தலைவர்களாக வந்தவர்களுள் டிவேலராவைப் போல் ஒரு விடுதலை வீரனைக் காணமுடியவில்லை.

டிவேலராவிடம் உள்ள பெருந்தன்மையும், தன்னலங்கருதாமையும், தியாக உணர்ச்சியும், மக்கள்நேய